நெல்லை மாநகர எல்லைக்கு உள்பட்ட ரெட்டியார்பட்டி சாலையில் தனியாகச் செல்பவர்களை வழிமறித்து நகை, பணம் பறிக்கும் சம்பவங்கள் அண்மையில் அதிகரிக்கத் தொடங்கியிருக்கின்றன. அதுவும், காரில் வரும் டிப்டாப் ஆசாமிகள், இருசக்கர வாகனங்களில் செல்வோரை நிறுத்தி அட்ரஸ் கேட்பதுபோலப் பேசி கொள்ளையில் ஈடுபட்டிருக்கிறார்கள். கொள்ளையர் பயன்படுத்திய கார்
சில தினங்களுக்கு முன்பு நெல்லையில் சி.பி.சி.ஐ.டி பிரிவில் பெண் சப்-இன்ஸ்பெக்டராகப் பணியாற்றுபவர் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, காரில் வந்த நபர்கள் வழிமறித்து நகையை பறித்துச் சென்றார்கள். அவர்களை பாளையங்கோட்டை குற்றப்பிரிவு காவல்துறையினர் சில மணி நேரத்திலேயே மடக்கிப் பிடித்தனர்.
இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் பகுதியைச் சேர்ந்த செந்தில்வேலன் என்பவர், தனது பைக்கில் நெல்லை புரநகர் பகுதியான ரெட்டியார்பட்டி பகுதிகுச் சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக காரில் நான்கு பேர் வந்திருக்கிறார்கள். பிடிபட்ட கொள்ளையர்கள்
கர்நாடகா பதிவு எண் கொண்ட காரில் இருந்து இறங்கிய நால்வரும் செந்தில்வேலனை வழிமறித்து ஒரு பேப்பரைக் காட்டி அதில் இருந்த முகவரிக்கு எப்படிச் செல்ல வேண்டும் என்று கேட்டுள்ளனர். அவர் வழி சொல்லிக் கொண்டிருக்கும்போதே கத்தியைக் காட்டி மிரட்டி அவரிடம் இருந்து மூன்றரை சவரன் நகை, 5,000 ரூபாய் ரொக்கப் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றனர்.
நான்கு வழிச் சாலையில் அந்த வாகனம் சென்றதைப் பார்த்த செந்தில்வேலன் உடனடியாக பாளையங்கோட்டை காவல் நிலையத்துக்குச் சென்று புகார் அளித்தார். போலீஸார் நான்கு வழிச் சாலையில் உள்ள சோதனைச் சாவடிகளை அலர்ட் செய்தனர்.
Also Read: நெல்லை: இரவில் போலீஸ்; பகலில் கொள்ளை!- வீடுகளை உடைத்து கைவரிசை காட்டிய ஏட்டு சிக்கிய பின்னணி
போலீஸ் நடவடிக்கையை எதிர்பார்த்த கொள்ளையர், நான்கு வழிச் சாலையில் செல்லாமல் ஊருக்குள் காரில் வந்திருக்கிறார்கள். பின்னர் காரை மறைவான இடத்தில் நிறுத்திவிட்டு அங்கிருந்த ஹோட்டல் ஒன்றில் சாப்பிட்டுள்ளனர்.
பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீஸார், நகருக்குள்ளும் தீவிர ரோந்துப் பணியில் இருந்தபோது ஒதுக்குப்புறமாக நிறுத்தப்பட்டிருந்த காரைப் பார்த்ததும் அது கொள்ளையர்களுடையது என்பதைக் கண்டுபிடித்தனர். அதனால், அவர்கள் வரும் வரைக்கும் காத்திருந்த போலீஸார் , மீண்டும் காருக்கு வந்த கொள்ளையர்கள் நால்வரையும் கைது செய்தனர். கொள்ளையரை சிறையில் அடைக்க நடவடிக்கை
அவர்களிடம் விசாரணை நடத்தியதில், கர்நாடக மாநிலம் பெங்களூரு மாண்டியா பகுதியைச் சேர்ந்த மனோஜ்குமார் (27), ரகுவரன் (31), அபிஷேக் (26), பிரவீன் (26) என்பது தெரியவந்தது. நான்கு பேரும் பெங்களூரு பகுதியில் இருந்து கிளம்பி தமிழகத்துக்குள் வரும் வழியில் ஆங்காங்கே கொள்ளையடித்து அந்தப் பணத்தில் உல்லாசமாக வாழ்க்கை நடத்தியதாக விசாரணையின்போது தெரிவித்துள்ளனர்.
பிடிபட்டவர்களிடம் இருந்து நகை, பணம் செல்போன்கள் மற்றும் கொள்ளைக்குப் பயன்படுத்திய கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. நான்கு பேரையும் போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நாங்குநேரி கிளைச் சிறையில் அடைத்தனர்.
http://dlvr.it/Rr1S4L
Thursday 21 January 2021
Home »
» நெல்லையில் பிடிபட்ட கர்நாடகா கொள்ளையர்கள்! - அட்ரஸ் கேட்பதுபோல வழிப்பறியில் ஈடுபட்டது அம்பலம்