இலங்கையில் இடிக்கப்பட்ட அதே இடத்திலேயே மீண்டும் முள்ளிவாய்க்கால் நினைவிடம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இலங்கையில் உள்நாட்டுப் போரின்போது, அப்பாவி தமிழ் இன மக்கள் கொல்லப்பட்டதை நினைவுகூரும் வகையில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில், முள்ளிவாய்க்கால் நினைவிடம் கடந்த 2019ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. இந்த நினைவிடம் அமைக்கப்படும்போதே, அதாவது 2018ஆம் ஆண்டு அதற்கான கட்டுமான பணிகளை நிறுத்துமாறு இலங்கை உயர்கல்வி அமைச்சகம், பல்கலைக்கழக மானியக் குழுவும் யாழ் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு உத்தரவிட்டிருந்தது. எனினும் முள்ளிவாய்க்கால் நினைவிடம் அமைக்கும் பணி மாணவர்களால் முடிக்கப்பட்டு, நினைவேந்தல் நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் இலங்கை யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவிடம் இடிக்கப்பட்டது. இதற்கு பல தரப்பில் இருந்தும் கடும் எதிர்ப்புகள் எழுந்தன. மாணவர்களும் தொடர்ந்து போராடி வந்தனர். இந்நிலையில் இடிக்கப்பட்ட அதே இடத்திலேயே மீண்டும் முள்ளிவாய்க்கால் நினைவிடம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. மாணவர்கள், இலங்கை அரசின் கோரிக்கையை ஏற்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழக துணைவேந்தர் சற்குண ராஜன் தெரிவித்தார். நினைவுத் தூண் பழைய மாதிரிலேயே அரசின் அங்கீகாரத்துடன் அமைக்கப்படும் என்றும் கூறினார். இதனையடுத்து அவரின் கோரிக்கையை ஏற்று மாணவர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டுள்ளனர்.
http://dlvr.it/RqKVvF
Monday 11 January 2021
Home »
» இலங்கை: இடிக்கப்பட்ட இடத்திலேயே மீண்டும் முள்ளிவாய்க்கால் நினைவிடம் அமைக்க அடிக்கல்