அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடனின் வெற்றியை நாடாளுமன்றம் உறுதி செய்த நிலையில், அதிகார மாற்றத்துக்கு டொனால்ட் ட்ரம்ப் ஒப்புதல் அளித்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றதாக நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ட்ரம்ப் அதிகார மாற்றத்துக்கு ஒப்புக்கொண்டுள்ளார். தேர்தல் முடிவில் தனக்கு உடன்பாடு இல்லாவிட்டாலும், ஜனவரி 20-ஆம் தேதி முறையாக அதிகார மாற்றம் நடைபெறும் என தனது அறிக்கையில் ட்ரம்ப் கூறியிருக்கிறார். ட்ரம்ப் ஆதரவாளர்கள் நாடாளுமன்றத்தில் வன்முறையில் ஈடுபட்ட நிலையில் பைடன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. சில மாநிலங்களில் உறுதியாகாமல் இருந்த பைடனின் வெற்றியை தற்போது நாடாளுமன்றம் உறுதி செய்துள்ளது. வெற்றி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டதால் வரும் ஜனவரி 20-ஆம் தேதி அமெரிக்காவின் 46வது அதிபராக பதவியேற்கிறார் ஜோ பைடன்.
http://dlvr.it/Rq5Yz4
Thursday 7 January 2021
Home »
» அமெரிக்கா: அதிகார மாற்றத்திற்கு ட்ரம்ப் ஒப்புதல்