No.1 Tamil website in the world | Tamil News Paper | Tamil Nadu Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, India News, World News,tamil news pape,no 1 tamil news website, tamil news paper, tamil newspaper, tamil daily newspaper, tamil daily,national tamil daily, tamil daily news, tamil news, tamil nadu news, tamilnadu news paper, free tamil news paper, tamil newspaper website, tamil news paper online, breaking news headlines,tamil news paper, current events, latest news, political news, business news, financial news, cinema news, sports news, latest cricket news, today news, current news, india news, world news, top news, lifestyle news, daily news update, regional newspapers, regional newspapers India, indian newspaper, indian daily newspaper, indian newspapers online, indian tamil newspaper, national newspaper, national daily newspaper,tamil news paper, national newspaper online, morning newspaper, daily newspaper, daily newspapers online,Tamil News | Online Tamil News | Tamil News Live | Tamilnadu News ,llive tamil news Portal offering online tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos, art culture

Saturday, 4 March 2017

ராகுல் தாய்லாந்துக்கு ஓட கூடாது; என்னுடன் கங்கைக்கு வரவேண்டும்: உமாபாரதி

புதுடில்லி: ‛உ..பி., தேர்தல் முடிவு வெளியாகும் போது ராகுல் தாய்லாந்துக்கு ஓட கூடாது. என்னுடன் கங்கைக்கு வரவேண்டும்' என மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமா பாரதி தெரிவித்துள்ளார்.

இறுதிகட்ட பிரசாரம்:

நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உ.த்தர பிரதேசத்தில் சட்டசபை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. ஆளும்கட்சியான சமாஜ்வாதி காங்கிரசுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. பா.ஜ., தனித்து போட்டியிடுகிறது. இறுதிகட்ட பிரசாரத்தில் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன.

ராகுல் குற்றசாட்டு:

இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை காங்., துணைத் தலைர்வ ராகுல், பிரதமர் மோடியின் தொகுதியான வாரணாசியில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, ‛நான் உ.பி.,யின் மகன். கங்கை தாய் என்னை குஜராத்திலிருந்து இங்கு அழைத்தார் என பிரதமர் மோடி பேசி வருகிறார். அவர் உ.பி., மாநிலத்துக்கும் கங்கை நதிக்கும் எந்த உதவி செய்யவில்லை. கங்கையை துாய்மையாக்க அவர் நடவடிக்கை எடுக்க வில்லை' என்று குற்றம்சாட்டினார்.

இந்நிலையில், ராகுலின் குற்றசாட்டிற்கு மத்திய நீர்வளத் துறை அமைச்சர் உமா பாரதி பதிலடி கொடுத்துள்ளார்.

உமாபாரதி பதிலடி:

இதுகுறித்து, உமாபாரதி கூறியதாவது:
ஐந்து மாநில தேர்தல் முடிவானது மார்ச் 11-ம் தேதி வெளியாகிறது. தேர்தல் முடிவுகள் வெளியானதும் ராகுல் தாய்லாந்துக்கு ஓட கூடாது. அவர் என்னுடன் கங்கை நதிக்கு வர வேண்டும். அப்போது, கங்கை நதியை துாய்மையாக்கும் பணிகள் துவங்கப்படாவிட்டால், நான் கங்கையில் குதிப்பேன். பணிகள் துவக்கப்பட்டால் ராகுல் கங்கையில் குதிக்க வேண்டும்.

கங்கை நதியை துாய்மையாக்கும் மத்திய அரசின் பணிகளுக்கு 6 ல் 5 மாநிலங்கள் தடையில்லா சான்று வழங்கின. ஆனால், ராகுல் கூட்டணி அமைத்துள்ள அகிலேசின் அரசு கங்கையை துாய்மையாக்க ஒப்புதல் வழங்கவில்லை.

இந்தியாவில் மகாத்மா காந்திக்கு பிறகு, மிகப்பெரிய துாய்மை விழிப்புணர்வை பிரதமர் மோடி ஏற்படுத்தி வருகிறார்.
இவ்வாறு அவர் பதிலடி கொடுத்தார்.

English Summary:

NEW DELHI: 'upi., While releasing the election results should not run for Rahul Thailand. Ganga come with me, "said the Central Water Resources Minister Uma Bharti.
Share:

Related Posts:


Daily Tamil News. Powered by Blogger.
553827

Contributors

Search This Blog