ஈரோடு மேற்கு சட்டப்பேரவைத் தொகுதி அமமுக வேட்பாளர் சிவசுப்பிரமணியன், முதியவர்களின் காலில் விழுந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற இன்னும் 12 நாட்களே உள்ள நிலையில் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், ஈரோடு மாவட்டம் மேற்கு சட்டப்பேரவைத் தொகுதி அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர் சிவசுப்பிரமணியன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இந்நிலையில் இன்று முத்தம்பாளையம் சத்யா நகர் உள்ளிட்ட பல பகுதிகளில் பரப்புரையில் ஈடுபட்ட வேட்பாளர், திடீரென முதியவர்களின் கால்களில் விழுந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதனை சற்றும் எதிர்பாராத முதியவர்கள் வேட்பாளரை தடுத்து ஆசிவழங்கி வாழ்த்தி அனுப்பினர். வேட்பாளர்கள் குறிப்பிட்ட வயது வாக்காளர்களை கவர்வதற்காக பல்வேறு யுக்தியை கையாண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
http://dlvr.it/RwL0MX
Thursday, 25 March 2021
Home »
» முதியவர்களின் காலில் விழுந்து வாக்கு சேகரித்த ஈரோடு மேற்குத் தொகுதி அமமுக வேட்பாளர்
முதியவர்களின் காலில் விழுந்து வாக்கு சேகரித்த ஈரோடு மேற்குத் தொகுதி அமமுக வேட்பாளர்
Related Posts:
ராமஜெயம் கொலை வழக்கு: சிபிஐக்கு மாற்ற கோரிய மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு l
தற்கொலை செய்வேன்.. செத்துருவேன்.. "துடைச்சிக்குவேன்" புகழ் சம்பத் மீது பாயுமா வழக்கு?
அதிமுகவை இணைத்திருப்பது எது தெரியுமா?: போட்டு உடைக்கும் எஸ்.வி.சேகர்
ஓ.பி.எஸ் சொல்றதுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாதுங்க... சி.வி. சண்முகம் காட்டம்
திபெத் செல்ல அனுமதி மறுப்பா: சீனாவுக்கு அமெரிக்கா பதிலடி
ஐ.நா., வரைவு அறிக்கையில் இந்திய முன்னுரிமைக்கு இடம்
பிரேசில் அதிபர் போல்சனாரோவுக்கு கொரோனா .. முககவசம் அணிந்தவாறு அறிவித்தார்..!
கனடாவும் மெக்சிகோவும் ரிலாக்ஸ் பண்ணலாம்.. இப்போதைக்கு ட்ரம்ப் ஒண்ணும் செய்யப் போவதில்லை!