கொரோனா பரவலை தடுக்க தமிழகத்தில் வரும் 10-ஆம் தேதி முதல் திருவிழா, மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா பரவல் நாடுமுழுவதும் அதிகரித்து வரும் நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகள் இருக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு தொடர்ந்து இருந்து வந்தது. அதனடிப்படையில் சமீபத்தில் தமிழக தலைமைச் செயலாளர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில் மறு உத்தரவு வரும் வரை தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் விவரம்: மதம் சார்ந்த கூட்டங்கள், திருவிழாக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கோயம்பேடு வணிக வளாகத்தில் சில்லரை வியாபாரக் கடைகள் வரும் 10 ஆம் தேதி முதல் செயல்படத் தடை விதிக்கப்பட்டுள்ளது. திருமண நிகழ்வுகளில் 100 பேருக்கு மட்டுமே அனுமதி. இறுதி ஊர்வலங்களில் 50 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி. தியேட்டர்களில் மீண்டும் 50 சதவீத இருக்கை மட்டுமே செயல்பட வேண்டும். தமிழ்நாடு முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும். மத்திய உள்துறை அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட வழித்தடங்களை தவிர சர்வதேச விமான போக்குவரத்திற்கான தடை தொடரும். பேருந்துகளில் பயணிகள் நின்றவாறு பயணிக்க அனுமதி இல்லை. ஷாப்பிங் மால்கள், பெரிய கடைகளில் 50 சதவீத வாடிக்கையாளர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும். வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு இ பாஸ் கட்டாயம். வாடகை மற்றும் டாக்ஸி வாகனங்களில் ஓட்டுநர் தவிர்த்து 3 பேர் மட்டுமே பயணிக்க அனுமதி. உணவகங்கள், தேனீர் கடைகளில் இரவு 11 மணிவரை 50 சதவீத பேர் அமர்ந்து உணவு உண்ண அனுமதி. பொழுதுபோக்கு பூங்காக்கள், கேளிக்கை விடுதிகள், அருங்காட்சியகங்கள் ஆகியவற்றில் 50% அனுமதி.
http://dlvr.it/RxGz0t
Friday, 9 April 2021
Home »
» ஏப்.10 முதல் தமிழகத்தில் மீண்டும் கடுமையான கட்டுப்பாடுகள்: திருவிழா, மத கூட்டங்களுக்கு தடை
ஏப்.10 முதல் தமிழகத்தில் மீண்டும் கடுமையான கட்டுப்பாடுகள்: திருவிழா, மத கூட்டங்களுக்கு தடை
Related Posts:
ராமஜெயம் கொலை வழக்கு: சிபிஐக்கு மாற்ற கோரிய மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு l
தற்கொலை செய்வேன்.. செத்துருவேன்.. "துடைச்சிக்குவேன்" புகழ் சம்பத் மீது பாயுமா வழக்கு?
அதிமுகவை இணைத்திருப்பது எது தெரியுமா?: போட்டு உடைக்கும் எஸ்.வி.சேகர்
ஓ.பி.எஸ் சொல்றதுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாதுங்க... சி.வி. சண்முகம் காட்டம்
திபெத் செல்ல அனுமதி மறுப்பா: சீனாவுக்கு அமெரிக்கா பதிலடி
ஐ.நா., வரைவு அறிக்கையில் இந்திய முன்னுரிமைக்கு இடம்
பிரேசில் அதிபர் போல்சனாரோவுக்கு கொரோனா .. முககவசம் அணிந்தவாறு அறிவித்தார்..!
கனடாவும் மெக்சிகோவும் ரிலாக்ஸ் பண்ணலாம்.. இப்போதைக்கு ட்ரம்ப் ஒண்ணும் செய்யப் போவதில்லை!