டோக்கியோவில் நடைபெற்ற இந்தியா - ஜெர்மனி அணிகள் இடையிலான வெண்கலப் பதக்கத்துக்கான ஆடவர் ஹாக்கி போட்டியில் இந்திய அணி 5 - 4 என்ற கோல் கணக்கில் வெற்றிப்பெற்று வெண்கலப் பதக்கம் வென்றது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வெண்கலப் பதக்கத்துக்கான ஆடவர் ஹாக்கி போட்டி இன்று நடைபெற்றது. இதில் இந்தியா - ஜெர்மனி அணிகள் மோதின. மிகவும் பரபரப்பாக தொடங்கிய இந்தப் போட்டியில் முதல் 2-ஆவது நிமிடத்திலேயே ஜெர்மனி அணி கோல் அடித்து முன்னணி வகித்தது. முதல் கால் ஆட்டத்தில் இந்தியாவுக்கு ஒரு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்து. ஆனால் இந்தியாவால் முதல் கோலை பதிவு செய்ய முடியவில்லை. இரண்டாம் கால் ஆட்டத்தில் தனி ஒருவனாக பந்தை விரட்டிச் சென்ற இந்தியாவின் சிம்ரன்ஜீத் கவுர் இந்தியாவுக்கான முதல் கோலை பதிவு செய்தார். ஆனால் அதன் பின்பு ஜெர்மனி 2 கோல்களை அடுத்தடுத்து விளாசி அதிர்ச்சி கொடுத்தது. ஆனால் மனம் தளராத இந்திய வீரர்கள் அடுத்து கிடைத்த பெனால்ட்டி வாய்ப்பை கோலாக்கினார். பின்பு இந்தியாவின் ஹர்மன்ப்ரீத் இந்தியாவுக்கான 3-ஆவது கோலை பதிவு செய்தார். இதனையடுத்து முதல் பாதி ஆட்டத்தில் இந்தியா 3, ஜெர்மனி 3 கோல்கள் என சமநிலையில் இருந்தன. முதல் பாதி முடிவடைந்ததும் இந்திய வீரர்கள் ஆக்ரோஷமாக விளையாடினர். இதில் ருபிந்தர் சிங் பால் அற்புதமான கோலை பதிவு செய்தார். இதனையடுத்து ஜெர்மனி வீரர் செய்த தவறால் இந்தியாவுக்கு பெனால்ட்டி ஸ்டோக் வாய்ப்பு கிடைத்து. இதனை சிம்ரன்ஜீத் கவுர் எதிர்கொண்டு 5-ஆவது கோல் அடித்தார். ஆனாலும் மனம் தளராத ஜெர்மனி அணியினர் இரண்டாவது பாதியில் மற்றொரு 4 ஆவது கோலை பதிவு செய்தனர். இதனால் ஆட்டம் பரபரப்பு அடைந்தது. ஆனால் இந்தியா தொடர்ந்து ஆக்ரோஷமாக விளையாடி ஆட்ட நேர முடிவு வரை ஜெர்மனியின் கோல் போடும் முயற்சியை தடுத்தனர். ஆட்டம் முடிய வெறும் 6 விநாடிகள் இருந்த நிலையில் ஜெர்மனிக்கு ஒரு பெனால்ட்டி வாய்ப்பு கிடைத்தது. ஆனால் இந்திய அணி வீரர்கள் அந்த வாய்ப்பை கச்சிதமாக முறியடித்தனர். இறுதி நேர முடிவில்  5-4 என்ற கணக்கில் இந்தியா வெற்றிப்பெற்று. ஒலிம்பிக்கில் 41 ஆண்டுகளுக்கு பின்பு இந்தியா பதக்கத்தை வசப்படுத்தியுள்ளது.
http://dlvr.it/S54Bpn
Thursday, 5 August 2021
Home »
 » வெற்றி... வெற்றி... ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கியில் வெண்கலம் வென்றது இந்தியா






 
 

 
 
 Posts
Posts
 
 
