சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வில் பங்கேற்கும் இளம் மருத்துவர்களை கால்பந்து போல கருதாதீர்கள் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்விற்கான பாடத்திட்டங்கள் கடைசி நிமிடத்தில் மாற்றப்பட்டிருப்பதாகவும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 41 முதுநிலை மருத்துவ படிப்பு முடித்த மருத்துவர்கள் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்கள். இந்த வழக்கு மீண்டும் உச்ச நீதிமன்ற நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்வுக்கான அறிவிப்புகள் வெளியிட்டதற்கு பிறகு பாடத்திட்டங்களை மாற்றியது ஏன்? இந்த மாற்றத்தை அடுத்த ஆண்டு ஏன் மேற்கொள்ள முடியாது? சில மாதங்களை தேர்வுக்கு இருக்கும் நிலையில் மாணவர்கள் இதற்கு எப்படி தயாராவார்கள்? என பல்வேறு கேள்விகளை எழுப்பிய நீதிபதிகள் அதிகாரம் இருக்கிறது என்பதற்காக இளம் மருத்துவர்களை கால்பந்தை போல கருதாதீர்கள் என கூறினர். இந்த வழக்கின் விசாரணை வரும் திங்கள் கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதையும் படிக்க: இம்ரான் கான் உரைக்கு பதிலடியாக வெளுத்து வாங்கிய ஐஎஃப்எஸ் அதிகாரி சினேகா துபே யார்?!
http://dlvr.it/S8TfHK
Tuesday, 28 September 2021
Home »
» ' இளம் மருத்துவர்களை கால்பந்து போல கருதாதீர்கள்' - உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி
' இளம் மருத்துவர்களை கால்பந்து போல கருதாதீர்கள்' - உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி
Related Posts:
ராமஜெயம் கொலை வழக்கு: சிபிஐக்கு மாற்ற கோரிய மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு l
தற்கொலை செய்வேன்.. செத்துருவேன்.. "துடைச்சிக்குவேன்" புகழ் சம்பத் மீது பாயுமா வழக்கு?
அதிமுகவை இணைத்திருப்பது எது தெரியுமா?: போட்டு உடைக்கும் எஸ்.வி.சேகர்
ஓ.பி.எஸ் சொல்றதுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாதுங்க... சி.வி. சண்முகம் காட்டம்
திபெத் செல்ல அனுமதி மறுப்பா: சீனாவுக்கு அமெரிக்கா பதிலடி
ஐ.நா., வரைவு அறிக்கையில் இந்திய முன்னுரிமைக்கு இடம்
பிரேசில் அதிபர் போல்சனாரோவுக்கு கொரோனா .. முககவசம் அணிந்தவாறு அறிவித்தார்..!
கனடாவும் மெக்சிகோவும் ரிலாக்ஸ் பண்ணலாம்.. இப்போதைக்கு ட்ரம்ப் ஒண்ணும் செய்யப் போவதில்லை!