மும்பை தேவ்னார் பகுதியில் இருக்கும் இறைச்சிக்கூடத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான ஆடுகள் நாடு முழுவதும் லாரிகளில் இறைச்சிக்காக கொண்டு வரப்படுவது வழக்கம். இதோடு இறைச்சிக்காக எருமை மாடுகளும் மும்பைக்கு கொண்டு வரப்படுகிறது. பொங்கல்: சந்தையில் குவிந்த ஆடுகள்; வியாபாரம் மந்தம்!
தேவ்னார் இறைச்சிக்கூடத்தில் வெட்டப்படும் ஆடு, மாடு இறைச்சி மும்பை முழுவதும் சப்ளை செய்யப்படுகிறது. பக்ரீத் மற்றும் ரம்ஜான் காலத்தில் விற்பனைக்காக இந்த இறைச்சிக்கூடத்திற்கு லட்சக்கணக்கான ஆடுகள் கொண்டு வரப்படுவது வழக்கமாகும்.
கர்நாடகாவிலிருந்து மும்பைக்கு லாரியில் குறுகிய இடத்தில் அடைத்து நூற்றுக்கணக்கான ஆடுகள் சாப்பாடு எதுவும் கொடுக்காமல் ஏற்றி வரப்படுவதாக விலங்குகள் நல வாரிய அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து ஆசிஷ் பாரிக் என்ற அதிகாரி தலைமையில் போலீஸார் கர்நாடகாவிலிருந்து வந்த ஒரு லாரியை மடக்கி சோதனை செய்தனர். அதில் 185 வெள்ளாடுகள், 80 செம்மறி ஆடுகள் அடைத்து வைக்கப்பட்டு இருந்தது. இந்த ஆடுகள் அனைத்தும் லாரியில் குறுகிய பகுதியில் அடைத்து வைக்கப்பட்டு இருந்தது. ஆடுகள்கிருஷ்ணகிரி: பொங்கல் பண்டிகைக்கு ஆடுகள் விற்பனை ஜோர்! – ரூ.8 கோடிக்கு விற்பனையான ஆடுகள்!
அதோடு இந்த ஆடுகளுக்கு எந்த வித உணவும் கொடுக்காமல் பட்டினி போட்டுகொண்டு வந்திருந்தனர். அது மட்டுமல்லாமல் லாரிக்கு ஆர்டிஒ அனுமதியும் இல்லை என்று சோதனையில் தெரிய வந்தது.
பறிமுதல் செய்யப்பட்ட ஆடுகளின் மதிப்பு ரூ. 6.09 லட்சமாகும். ஆடுகள் மட்டுமல்லாது அதனை ஏற்றி வந்த 10 லட்சம் மதிப்புள்ள லாரியையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ஆடுகளை லாரியில் கொண்டு வந்த டிரைவர் ரியாஷ் பாபாசாஹேப் என்பவர் மீது மோட்டார் வாகன சட்டம் மற்றும் விலங்குகள் கொடுமைச்சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளார்.
http://dlvr.it/SgxTbc
Monday 16 January 2023
Home »
» கர்நாடகா - மும்பை: உணவே கொடுக்காமல் லாரியில் ஏற்றிச் சென்ற 266 ஆடுகள்!