சென்னை, அம்பத்தூரில் இயங்கிவரும் ஆவின் பால் பண்ணையில், கடந்த இரண்டு மாதங்களாகப் பணியாற்றிய குழந்தைத் தொழிலாளர்களுக்கு ஒப்பந்த நிறுவனம் உரிய ஊதியம் வழங்கவில்லை எனக் கூறி, பாதிக்கப்பட்டதாகக் கூறப்பட்ட சிறார்கள் ஆவின் நுழைவு வாயில் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் அந்தப் பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து அவர்களைச் சமாதானம் செய்து அனுப்பிவைத்தனர்.பால் வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ்
அதைத் தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சியினர் தி.மு.க அரசுக்குக் கண்டனம் தெரிவித்தனர். இதற்கு பால் வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், ``சிறார்கள் பணியமர்த்தப்பட்டதாக வெளியான தகவல் முற்றிலும் உண்மைக்குப் புறம்பான ஒரு சித்திரிக்கப்பட்ட செய்தி" என விளக்கமளித்திருந்தார். இந்த நிலையில், பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், இந்த விவகாரத்தில் அமைச்சரைச் சாடி ட்வீட் செய்திருக்கிறார்.
அதில், ``ஆவின் நிறுவனத்தில், சிறார்களைப் பணியமர்த்தியதாக செய்திகள் வெளியானதும், ஆரம்பம் முதல் அதை மழுப்பி மறைக்கும் முயற்சியில்தான் ஈடுபட்டிருக்கிறார் தமிழக பால் வளத்துறை அமைச்சர்.
அரசு நிறுவனத்தில் சிறார்களைப் பணியமர்த்தி, அதற்கான ஊதியத்தையும் வழங்காமல், அவர்கள் போராட்டம் நடத்தும் அளவுக்கு அவலநிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதற்கு தமிழக பால் வளத்துறை அமைச்சரே பொறுப்பு. பால் வளத்துறை அமைச்சர், சிறார்கள் ஆவின் அலுவலகத்தில் பணியமர்த்தப்படவில்லை என்று கூறுகிறார். ஆனால், உண்மைநிலை நேரெதிராக இருக்கிறது.அண்ணாமலை
சிறார்கள் ஆவின் நிறுவனத்தில் பணி செய்திருப்பதற்கான காணொளி ஆதாரங்கள் வெளியாகி அதிர்ச்சியளிக்கின்றன. ஆனாலும் அமைச்சர் இன்னும் உண்மையை மறைக்கும் முயற்சியிலேயே ஈடுபட்டுவருகிறார். ஊடகங்களில் வெளியாகியிருக்கும் காணொளிகள், அவர் சொல்வது பொய் என்பதை நிரூபிக்கின்றன.
பள்ளி மாணவர்களுக்கான தேசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு, தமிழகம் சார்பாக மாணவர்களைத் தேர்வு செய்யாமல் அவர்கள் எதிர்காலத்தை வீணடித்திருக்கும் திறனற்ற தி.மு.க அரசு, தற்போது, குழந்தைத் தொழிலாளர்களை ஊக்குவிக்கிறது.முதல்வர் ஸ்டாலின்
உடனடியாக, சிறார்களைப் பணியில் அமர்த்தியவர்கள் அத்தனை பேர்மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், குறிப்பிட்ட ஒப்பந்ததாரரை மேற்கொண்டு அரசுப் பணிகளில் இடம்பெறாத வண்ணம், கறுப்புப் பட்டியலில் வைக்க வேண்டும் என்றும் தமிழக பா.ஜ.க சார்பாக வலியுறுத்துகிறேன்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.ஆளுநர் விமர்சனங்கள்... 'நமக்கு ஓர் எழுச்சி' - அணுகுமுறையை மாற்றுகிறாரா முதல்வர் ஸ்டாலின்?!
http://dlvr.it/SqPKyJ
Friday 9 June 2023
Home »
» ``ஆவினில் சிறார்கள்... உண்மையை மறைக்க முயல்கிறார் பால்வளத்துறை அமைச்சர்!" - சாடும் அண்ணாமலை