மக்களவைத் தேர்தலுக்கு பா.ஜ.க வெளியிட்ட முதல் வேட்பாளர் பட்டியலில் மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி பெயர் இடம் பெறவில்லை. நிதின் கட்கரி கடந்த மக்களவைத் தேர்தலிலிருந்து பிரதமர் நரேந்திர மோடியிடமிருந்து விலகியே இருப்பதாக பேச்சுகள் அடிபடுகின்றன. அவரது பெயர் ஒரு நேரத்தில் பிரதமர் பதவிக்கும் அடிபட்டது. இதனால் நிதின் கட்கரியுடன் பிரதமர் மோடி அதிக நெருக்கம் வைத்துக்கொள்வதில்லை எனக் கூறப்படுகிறது. ஆர்.எஸ்.எஸ்-ஸுடன் இருக்கும் நெருக்கம் காரணமாக நிதின் கட்கரி தொடர்ந்து அமைச்சராக இருக்கிறார். பா.ஜ.க-வின் முதல் வேட்பாளர் பட்டியலில் நிதின் கட்கரி பெயர் இடம் பெறாதது குறித்து சிவசேனா (உத்தவ்) தலைவர் உத்தவ் தாக்கரே விமர்சனம் செய்திருந்தார். மகாராஷ்டிராவில் பா.ஜ.க கூட்டணியில் தொகுதிப் பங்கீடு இன்னும் முடியவில்லை. தாக்கரே - நிதின் கட்கரி
இப்போதுதான் கூட்டணிக் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடு முடிவாகியிருக்கிறது. இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. மகாராஷ்டிரா வேட்பாளர் பட்டியல் வெளியாகும்போது நிதின் கட்கரி பெயர் முதல் பட்டியலில் இடம் பெறும் என்று துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் பதிலடி கொடுத்தார். இந்த நிலையில் உத்தவ் தாக்கரே, யவத்மால் என்ற இடத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுகையில், ``பா.ஜ.க-வில் அவமதிக்கப்பட்டால் கட்சியிலிருந்து வெளியேறுங்கள். ஒரு நேரத்தில் பா.ஜ.க ஊழல்வாதி என்று சொன்ன கிருபாசங்கர் சிங் போன்றவர்களுக்கு கட்சியின் முதல் வேட்பாளர் பட்டியலில் இடம் கொடுத்திருக்கிறார்கள்.
ஆனால் நிதின் கட்கரிக்கு இடமில்லை. எனவே இரண்டு நாள்களுக்கு முன்பு நிதின் கட்கரியிடம் சொன்னதையே மீண்டும் சொல்கிறேன். அங்கு அவமதிக்கப்பட்டால் எங்களிடம் வாருங்கள். உங்களது வெற்றியை உறுதியாக்குகிறோம். நாங்கள் ஆட்சிக்கு வரும்போது, உங்களை அமைச்சராக்குகிறோம். குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படுவது தேர்தல் கோஷமாகும். இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்கதுதான். ஆனால் அது அறிவிக்கப்பட்ட நேரம்தான் சந்தேகத்தைக் கிளப்புகிறது.
ஜம்மு காஷ்மீரில் 370-வது சிறப்புச் சட்டம் நீக்கப்பட்டு 4 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. ஆனால் அங்கு இன்னும் தேர்தல் நடத்தப்படவில்லை. பண்டிட்டுகள் இன்னும் காஷ்மீர் திரும்பவில்லை. காஷ்மீர் பண்டிட்டுகளை முதலில் அவர்களது சொந்த ஊருக்குக் கொண்டு வந்துவிட்டு, குடியுரிமைச் சட்டத்தை அமல்படுத்துங்கள். வரும் தேர்தலில் பா.ஜ.க மதங்களில் பிரிவினையை ஏற்படுத்த முயற்சிக்கிறது. அரசியலமைப்புச் சட்டத்தையும் திருத்த பா.ஜ.க விரும்புகிறது. பிரதமருக்கு இன்னும் மணிப்பூர் செல்ல நேரம் கிடைக்கவில்லை'' என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/47zomWY
https://bit.ly/47zomWY
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/47zomWY மீண்டும் வாரணாசியில் மோடி; `காஷ்மீர் டு கேரளா' - பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!
http://dlvr.it/T411F2
Wednesday, 13 March 2024
Home »
» ஃப்ர்ஸ்ட் லிஸ்ட்டில் பெயர் மிஸ்ஸிங்; `அவமதிக்கப்பட்டால், இங்கு வாருங்கள்'- கட்கரிக்கு உத்தவ் அழைப்பு