ஜார்க்கண்ட் மாநிலத்தில் பான் மசாலா விற்கும் ஒருவர், தனது வங்கிக் கணக்கில் ரூ.9.99 கோடி இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
கருப்புப் பணம் வைத்திருக்கும் யாராவது அவருடைய வங்கிக் கணக்கில் கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை செலுத்தியிருக்கலாம் என்று விசாரணை அதிகாரிகள் சந்தேகிக்கிறார்கள்.
ஜார்க்கண்ட் மாநிலம், கிரிடி மாவட்டத்தைச் சேரந்த பப்பு குமார் திவாரி என்ற இளைஞர், பான் மசாலா விற்பனைக் கடை நடத்தி வருகிறார். இவர், தனது எஸ்பிஐ வங்கிக் கணக்கில் இருந்து ரூ.1,000 எடுப்பதற்காக, அருகில் உள்ள ஏடிஎம் மையத்துக்குச் சென்றார். அங்கு அவரது வங்கிக் கணக்கு முடக்கப்பட்டிருந்ததால், அவரால் பணம் எடுக்கவில்லை. அதையடுத்து, அருகில் உள்ள வங்கிக் கிளைக்குச் சென்று தனது பிரச்னையைத் தெரிவித்தார். அப்போது, அவரது வங்கிக் கணக்கைப் பார்த்த அதிகாரிகள், அதில், ரூ.9.99 கோடி இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதைக் கேட்ட பப்பு குமாரும் அதிர்ச்சியடைந்தார்.
இதுதொடர்பாக, அவர் கூறியதாவது:
எனது வங்கிக் கணக்கில் ரூ.4,500 இருந்தது. அதிலிருந்து ரூ.1,000 எடுக்க முயன்றபோது பணம் வராததால், வங்கி அதிகாரியிடம் முறையிட்டேன்.
எனது வங்கிக் கணக்குக்கு இவ்வளவு பெரிய தொகை எப்படி வந்தது என்று வங்கி அதிகாரிகள் ஏராளமான கேள்விகளை எழுப்பினர். சொற்ப வருமானத்துக்காக, காலையில் இருந்து இரவு 10 மணி வரை பான் மசாலா விற்பனை செய்யும் சாதாரண மனிதன் நான் என்று கூறியதை அவர்கள் நம்பத் தயாராக இல்லை.
எனது வங்கிக் கணக்கில் சந்தேகத்துக்கிடமான வகையில் இதுவரை எந்த பணப் பரிவர்த்தனையும் நடைபெறவில்லை. எனது கணக்கில் இருந்த அதிகபட்சத் தொகையே ரூ.1.5 லட்சம்தான். எனது வங்கிக் கணக்கில் இவ்வளவு பெரிய தொகை இருப்பதால், நானும், எனது குடும்பத்தினரும் இரவில் உறக்கமின்றி கவலையுடன் இருக்கிறோம் என்றார் அவர்.
இதனிடையே, இந்த வங்கிக் கணக்கு தொடர்பாக, காவல் துறைக்கு வங்கி அதிகாரிகள் தகவல் கொடுத்தனர். அங்கு வந்த காவல் துறையினர், பப்பு குமாரிடம் சிறிது நேரம் விசாரணை நடத்திவிட்டுச் சென்றனர். பின்னர், அவருடைய வங்கிக் கணக்கை குற்றவியல் பிரிவு போலீஸார் முடக்கி வைத்தனர்.
English Summary : Pan masala Rs 10 crore in the bank account of the seller!In Jharkhand, pan masala one who sells his bank account of Rs .9.99 crore found traumatized. Black Money holding someone in his bank account and millions of rupees of money may have the hearing that authorities suspect.