புதுடில்லி :
நவம்பர் 10ம் தேதி முதல் 13 ம் தேதி வரை ரூ.50,000 கோடி பணம் விநியோகிக்கப்பட்டுள்ளது என மத்திய பொருளாதார விவகாரத்துறை செயலாளர் சக்திகாந்ததாஸ் தெரிவித்துள்ளார்.
டில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய சக்திகாந்த தாஸ், நவம்பர் 10ம் தேதி முதல் 13ம் தேதி வரை ரூ.50,000 கோடி பணம் விநியோகிக்கப்பட்டுள்ளது. பண பரிவர்த்தனைகள் அரசால் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மக்களுக்கு பணம் செல்லும் அனைத்து வழிகளும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. பணம் எடுப்பது, மாற்றுவது எளிதாக்கப்பட்டுள்ளது. விரைவாக பணம் எடுப்பதற்காக நாடு முழுவதும் மைக்ரோ ஏடிஎம்.,கள் நிறுவப்படும். பணபரிவர்த்தனையை கண்காணிக்க தனிக்குழு அமைக்கப்படும். இ-கேசை ஏற்றுக் கொள்ளாத வர்த்தக அமைப்புக்கள் பற்றி நேரடியாக புகார் தெரிவிக்கலாம்.
முக்கிய மருத்துவமனைகளில் மொபைல் பேங்கிங் சேவை வேன்களை அமைக்க வங்கிகளை கேட்டுக் கொண்டுள்ளோம். புதிய ரூ.500 நோட்டுக்கள் விநியோகிக்கப்பட்டு, புழக்கத்திற்கு வந்துள்ளன. சிறிய தொகையிலான ரூபாய் நோட்டுக்களையும் விநியோக்க வங்கிகளை கேட்டுள்ளோம். கிராமப்புறங்களில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர், கிளை தபால் நிலையங்களிலும் பணத்தை டெபாசிட் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 3 மாதங்களுக்கு பரிவர்த்தனை உள்ள நடப்பு கணக்கு வைத்திருக்கும் கம்பெனிகள், வாரத்திற்கு ரூ.50,000 வரை பணம் எடுத்துக் கொள்ளலாம். இதுவரை ரூ. 3 லட்சம் கோடி பழைய நோட்டுக்கள் டெபாசிட் செய்யப்பட்டுள்ளன. டெபிட், கிரெடிட் கார்டு பணபரிவர்த்தனை மீது விதிக்கப்படும் கட்டணங்களில் சலுகை அளிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளோம். தினமும் பலமுறை பணபரிவர்ர்த்தனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஏடிஎம்.க்களை மாற்றி அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணிகள் இன்னும் சில வாரங்களில் நிறைவடையும்.
பணபரிவர்த்தனை தொடர்பாக மக்கள் எவ்வித பீதியும் அடைய வேண்டாம். போதிய அளவில் பணம் இருப்பதாக ரிசர்வ் வங்கி ஏற்கனவே அறிவித்துள்ளது. 1.3 லட்சம் தபால் அலுவலங்களும் பழைய நோட்டுக்களை மாற்றித் தரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. மக்களின் வசதிக்காக அனைத்து வங்கிகள், தபால் நிலையங்கள், ஏடிஎம்.,கள், இ-பே முறைகளும் அரசால் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ரூபாய் நோட்டு விநியோகத்தை அதிகரிப்பது, கண்காணிப்பது தொடர்பாக நேற்று இரவு பிரதமர் ஆலோசனை நடத்தினார் என தெரிவித்துள்ளார்.