தி.மு.க., தலைவர் கருணாநிதியை, லண்டர் டாக்டர் பரிசோதித்து, அலர்ஜி பாதிப்பு நீங்க, மருத்துவ ஆலோசனைகள் வழங்கியுள்ளார்.
தி.மு.க., தலைவர் கருணாநிதி, உடல்நலக் குறைவால், சென்னை கோபாலபுரத்தில் உள்ள வீட்டில், 45 நாட்களாக சிகிச்சை பெற்று வருகிறார்.
காய்ச்சல், இருமலுக்கு மாத்திரை சாப்பிட்டதில் அலர்ஜி ஏற்பட்டு, உடலில் வேனல் கட்டிகள் ஏற்பட்டன. அதனால், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பார்வையாளர்கள், வெளியாட்கள் யாரும் அவரை சந்திக்க அனுமதிக்கவில்லை.
காரணம்:
கருணாநிதியின் குடும்பத்தினரான, அழகிரி, செல்வி, ஸ்டாலின், துணைவி ராஜாத்தி,கனிமொழி, தமிழரசு உள்ளிட்டோர் மட்டும் சந்தித்து பேசினர்.தனியார் மருத்துவமனை டாக்டர்கள், வீட்டிற்கு வந்து அளித்த சிகிச்சையால், அவரது உடல்நலனில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
உடலில் ஏற்பட்டிருந்த, கொப்பளங்கள் மறைந்து விட்டன.இந்நிலையில், அவருக்கு தோலில் ஏற்பட்டுள்ள அலர்ஜிக்கான காரணம் அறிய, லண்டனை சேர்ந்த தோல் நோய் நிபுணர், நேற்று முன்தினம், சென்னைக்கு வரவழைக்கப்பட்டார். கருணாநிதிக்கு, மருத்துவ பரிசோதனை நடத்தி, மேல் சிகிச்சைக்கான சில ஆலோசனைகள் வழங்கியுள்ளார்.
சந்திப்பாரா?
கருணாநிதி பெருமளவு குணம் அடைந்து, உற்சாகமாக உள்ளார் என, கூறப்படுகிறது. இதனால், பண பிரச்னை தொடர்பாக, நவ., 24ல் நடைபெறவுள்ள, மனித சங்கிலி.
போராட்டத்தில் அவர் பங்கேற்க வேண்டும் என, மூத்த தலைவர்கள் சிலர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.திருப்பரங்குன்றம், தஞ்சாவூர், அவரக்குறிச்சி சட்டசபை தொகுதிகளின் தேர்தல் முடிவுகள், இன்று, 12:00 மணிக்குள் தெரிய வரும்.
இந்த முடிவுகள் குறித்து கருத்து தெரிவிக்க, பத்திரிகையாளர்களை, கருணாநிதி சந்திப்பாரா அல்லது அறிக்கை வெளியிடுவாரா என, கட்சியினர் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
English Summary:
DMK President Karunanidhi, lantar doctor examine the impact of allergy you have, provided medical consultations.