பிரிவினைவாதிகளின் விருப்பம்:
அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற சமூக ஆர்வலரான கைலாஷ் சத்யார்த்தி டில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசியதாவது: காஷ்மீரில் கல்வி நிலையங்கள் எரிக்கப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது. குழந்தைகள் கல்வியறிவு பெற்றால் தொழில்நுட்பம், குடியுரிமை, மரியாதை, வரலாறு, கலாசாரம் மற்றும் அதன் மதிப்புகளை கற்றுக் கொள்வார்கள். அவ்வாறு கற்றுக் கொண்டால், அவர்களை மூளைச் சலவை செய்து பயன்படுத்த முடியாது. எனவே குழந்தைகளுக்கு கல்வி கிடைக்காத நிலையை ஏற்படுத்துவதே பிரிவினைவாதிகளின் விருப்பம். அதனால்தான் பள்ளிகளை தீவைத்துக் கொளுத்தியுள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
டில்லியில் மாநாடு:
மேலும் அவர் தெரிவிக்கையில், டில்லியில் டிச., 10 மற்றும் 11ம் தேதியில், நோபல் பரிசு பெற்றவர்கள் மற்றும் குழந்தைகள் நலனுக்காக தங்கள் வாழ்வை அர்ப்பணித்த தலைவர்கள் கலந்து கொள்ளும் மாநாடு ஜனாதிபதி மாளிகையில் நடைபெறவுள்ளது எனத் தெரிவித்தார்.