புதுடில்லி:ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரியை, வரும் நிதியாண்டில் அமல் படுத்த திட்டமிடப்பட்டுள்ள நிலையில், ஜி.எஸ்.டி., கவுன்சிலின் அதிகாரம் தொடர்பாக,
மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே அதிகார போட்டி நிலவுகிறது; இதனால், ஜி.எஸ்.டி., அமலுக்கு வரும் நாள் தள்ளிப் போகும், எனத் தெரிகிறது.
நாடு முழுவதும் உள்ள பல்வேறு வரி விகிதங் களுக்கு மாற்றாக, ஒரே சீரான வரி விதிப்பை கொண்டு வரும் வகையில், ஜி.எஸ்.டி., வரி விதிப்பு முறை அமல்படுத்தப்பட உள்ளது; அடுத்த ஆண்டு, ஏப்ரல், 1ல் இருந்து, நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த வரி விதிப்பு தொடர்பான முடிவுகளை எடுக்கக் கூடிய உயர் அமைப்பான, ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம், மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில், சில நாட் களுக்கு முன் நடந்தது. இதில் உறுப்பினர்களாக உள்ள, மாநில நிதியமைச்சர்கள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில், ஜி.எஸ்.டி., வரி விகிதம், 5 சதவீதம் முதல், 28 சதவீதம் வரை நிர்ணயிக் கப்பட்டது. எனினும், சில பிரச்னை களுக்கு, கூட்டத்தில் தீர்வு காணப்படவில்லை. ஜி.எஸ்.டி.,கவுன்சிலை கட்டுப்படுத்தும், அதிகாரம் பரவலாக்கப்பட வேண்டும் என்பது மாநிலங்களின் கோரிக்கை; அதேசமயம், அதிகாரத்தை தன் கட்டுப்பாட்டில் வைக்க, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி விரும்புகிறார்.
அதுபோலவே, சரக்கு மற்றும் சேவை வரி விதிக்கப்பட்ட பிறகு, அதே பொருட்களுக்கு,பிற வடிவில், வரிகள் விதிக்க மத்திய அரசு எதிர்ப்பு தெரிவிக்கிறது;
ஆனால், பல மாநிலங் களில் பல விதமான வரிகள் உள்ளன; கேளிக்கை வரி, உள்ளாட்சி வரி என்ற பெயரில் சில வகை வரிகள் விதிக்கப்படுகின்றன. இதை விட்டுக்கொடுக்க மாநிலங்கள் தயாரில்லை.
இதனால், முடிவெடுப்பதில் சிக்கல் நிலவுகிறது. எனவே, திட்டமிட்டபடி, 2017 ஏப்ரல், 1ல்,
ஜி.எஸ்.டி., வரியை அமல்படுத்துவதில் சிக்கல் நீடித்து வருகிறது.
இதுகுறித்து நிதியமைச்சக வட்டாரங்கள் கூறியதாவது:
ஜி.எஸ்.டி., வரியை அமல்படுத்துவதில் மாநிலங்கள் மற்றும் நிதியமைச்சகம் இடையே ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. சில விஷயங்களில், கருத்து வேறுபாடு நிலவுகிறது;
இதனால், முடி வெடுப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக, நவம்பர், 20ம் தேதி, மாநில நிதியமைச்சர்களுடன், மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி ஆலோசனை நடத்துகிறார்;
இது, அரசியல் ரீதியாக பிரச்னைக்கு தீர்வு ஏற்பட வாய்ப்பாக அமையும். இதன் பின், நவம்பர், 24 மற்றும் 25ல், மீண்டும் ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம் நடைபெறும். அதில், இறுதி முடிவெடுக்கப்படும். இவ்வாறு மத்திய நிதிஅமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மற்ற வரிகளுக்கு எதிர்ப்பு:
மத்திய அரசுக்கும், மாநிலங்களுக்கும் இடையே, கருத்து வேறுபாடு நிலவும்அம்சங்கள்:
* மாநிலங்கள் வேறு சில வரிகள் விதிக்க கோரு வதை, மத்திய அரசு எதிர்க்கிறது
* ஜி.எஸ்.டி., வரி இழப்பீடு, கூடுதல் வரி தொகுப்பில் இருந்து ஈடு செய்வதாக மத்திய அரசு கூறுகிறது; மாநிலங்கள் இதை ஏற்கவில்லை
* தங்கத்துக்கு, ஜி.எஸ்.டி., வரி விதிப்பு
4 அடுக்கு வரி விதிப்பு:
ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள்:
* 5, 12, 18, 28 சதவீதங்களாக, நான்கு அடுக்கு வரி விதிப்பு முறை ஏற்படுத்தப்படும்
* இதில், மக்கள் அதிக அளவில் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருட்களுக்கு, குறைந்த பட்சமாக, 5 சதவீத வரி விதிக்கப்படும்
* ஆடம்பர பொருட்களுக்கு, அதிகபட்சமாக, 28 சதவீத வரி விதிக்கப்படும்
* இந்த அதிகபட்ச வரியுடன், ஆடம்பர கார்கள், சிகரெட் போன்ற புகையிலை பொருட்கள், மது வகைகள் மற்றும் குளிர்பானங்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும்
* ஜி.எஸ்.டி., வரி விதிப்பு கொண்டு வரப்படுவ தால், மாநிலங்களுக்கு ஏற்படும் வரி இழப்பை, ஐந்து ஆண்டுகளுக்கு மத்திய அரசு ஈடு செய்யும்.
ஜி.எஸ்.டி., வரி விஷயத்தில், பேசி தீர்க்க வேண்டிய விஷயங்கள் உள்ளன. மாநில நிதி யமைச்சர்களுடன் பேசி வருகிறோம்; இதனால் தாமதம் ஏற்படுவது உண்மை தான். எனினும், விரைவில் தீர்வு எட்டப்படும். திட்டமிட்டப்படி, 2017, ஏப்ரல், 1ல், ஜி.எஸ்.டி., வரியை அமல் படுத்துவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது.