சென்னையில் நடக்கும் காங்கிரஸ்- எம்.எல்.ஏ., வசந்தகுமாரின் நுால் வெளியீட்டு விழாவில், தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், புதுச்சேரி முதல்வர், நாராயணசாமியுடன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர், திருமாவளவனும் கலந்து கொள்கிறார். இதன்மூலம், தி.மு.க., - காங்., கூட்டணியில், திருமா சேருவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கடந்த சட்டசபை தேர்தலில், மக்கள் நலக் கூட்டணியில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இடம்பெற்றது; திருமாவளவன் உட்பட இக்கட்சியினர் அனைவரும் தோல்வி அடைந்தனர். திருமா தோல்விக்கு, மக்கள் நலக் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் சரிவர வேலை செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. எனவே, மக்கள் நலக் கூட்டணியை விட்டு வெளியேறி, லோக்சபா தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் இடம்பெற வேண்டும் என, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் விரும்புகின்றனர். இதன் தொடர்ச்சியாக, காவிரி விவகாரத்தில், தி.மு.க., தலைமையில் நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, ஸ்டாலினுக்கு திருமாவளவன் கடிதம் அனுப்பினார். ஸ்டாலின் நன்றி தெரிவித்து, பதில் கடிதமும் அனுப்பினார். பொது சிவில் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், சென்னையில் கருத்தரங்கம் நடந்தது. அதில், தி.மு.க., மகளிர் அணி செயலர் கனிமொழி பங்கேற்றார். இரு கட்சிகளுக்கும் இடையே நட்பு மலர்ந்துள்ள நிலையில், புதுச்சேரி மாநிலம், நெல்லித்தோப்பு இடைத்தேர்தலில், காங்கிரசுக்கு திருமாவளவன் ஆதரவு தெரிவித்துள்ளார். இந்த தொகுதியில், அம்மாநில முதல்வர், நாராயணசாமி போட்டியிடுகிறார். அதேநேரத்தில், தமிழகத்தில் மூன்று தொகுதிகளில் நடக்கும் இடைத்தேர்தலில், தே.மு.தி.க.,வுக்கு ஆதரவு அளிக்க மறுத்து விட்டார். இந்நிலையில், சமீபத்தில், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் ஊடகப் பிரிவு ஒருங்கிணைப்பாளர், ரமணியின் இல்ல திருமண விழா நடந்தது. அதில் பங்கேற்ற திருமாவளவனை, காங்கிரஸ் வர்த்தக பிரிவு தலைவர், வசந்தகுமார் சந்தித்து பேசினார். அப்போது, தன்னுடைய, 'வெற்றிப் படிக்கட்டு' நுால் வெளியீட்டு விழாவுக்கு அழைப்பு விடுத்தார். இந்த விழா, வரும், 28ல், சென்னையில் நடக்கிறது. நுால் வெளியீட்டு விழாவில், ஸ்டாலின் முதல் பிரதியை வெளியிட, நாராயணசாமி பெற்றுக் கொள்கிறார். ஏற்கனவே, நெல்லித்தோப்பு தொகுதியில் போட்டியிடும் நாராயணசாமிக்கு, திருமாவளவன் ஆதரவு தெரிவித்துள்ளதால், இம்மூன்று கட்சிகளுக்கும் இடையே கூட்டணி மலர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
English Summary:
Kankiras MLA will take place in Chennai, Vasantha the launch of the Nu, the DMK treasurer MK Stalin, Puducherry Chief Minister, Narayanaswamy the Liberation Panthers Party leader, will attend tirumavalavanum.