சென்னை: ரூபாய் நோட்டு தொடர்பாக மத்திய அரசு அறிவித்துள்ள திடீர் உத்தரவு குறித்து மாபெரும் ஆன்லைன் சர்வே நடத்தியது.
31198 பேர் வாக்களித்ததன் மூலம், ஆன்லைன் வாக்களிப்பில் ஒரு மைல் கல்லை தொட்டுள்ளது இந்த கருத்துக் கணிப்பு.
ரூபாய் ஒழிப்பு தொடர்பாக 11 கேள்விகளை முன்வைத்து ஒன் இந்தியா தமிழ் சர்வே நடத்தப்பட்டது. சாமானியர்கள் சந்திக்கும் ரூபாய் நோட்டு பிரச்சனைக்கு யார் காரணம் என்ற கேள்விக்கு அரசுதான் என்று 53.9% பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.
வங்கிக்கும் பங்கு:
அடுத்தபடியாக, சாமானியர்கள் சந்திக்கும் பிரச்சனைக்கு ரிசர்வ் வங்கியே காரணம் என 27.6% பேர் கருத்து தெரிவித்துள்ளனர். மூன்றாவதாக, சாமானியர்கள் சந்திக்கும் இந்த பிரச்சனைக்கு வங்கிகள்தான் காரணம் என 18.5% கருத்து தெரிவித்துள்ளனர்.
வாக்கு எண்ணிக்கை :
வாக்கு அடிப்படையில், அரசுதான் என கூறியவர்கள் மொத்தம், 13099 பேராகும். வங்கிகள்தான் பிரச்சினைக்கு காரணம் என்போர் 4510. ரிசர்வ் வங்கிதான் காரணம் என்போர் 6713 பேராகும்.
கூட்டம்:
கடந்த 8ம் தேதி இரவு பிரதமர் மோடி பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவித்தார். இதன்பிறகு வங்கிகளிலும், ஏடிஎம்களிலும் கூட்டம் அலை மோதுகிறது.
கேள்விக்கான அவசியம்:
பணம் எடுக்கும் முயற்சியின்போது, இதுவரை 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில், குழப்பத்திற்கு யார் காரணம் என்று மக்கள் நினைக்கிறார்கள் என்பதை அறிய இந்த கேள்வி முன் வைக்கப்பட்டது.
English summary:
This is one of the biggest online polls and we are giving you the results of survey''