புதுடெல்லி:
பயங்கரவாதத்துக்கு ஆதரவாக செயல்படும் நாடுகள் மீது கடும் நடவடிக்கை தேவை என்று பிரதமர் மோடியும், இங்கிலாந்து பிரதமர் தெரசா மேயும் கூட்டாக வலியுறுத்தினர்.
இங்கிலாந்து பிரதமர்
இங்கிலாந்து பிரதமர் தெரசா மே 3 நாள் சுற்றுப்பயணமாக நேற்று முன்தினம் இரவு இந்தியா வந்தார். அவர் பிரதமர் ஆன பிறகு ஐரோப்பிய யூனியனில் அல்லாத ஒரு நாட்டுக்கு பயணம் மேற்கொள்வது இதுவே முதல் முறை ஆகும்.
டெல்லியில் நேற்று பிரதமர் மோடி தொடங்கி வைத்த இந்திய–இங்கிலாந்து தொழில்நுட்ப மாநாட்டிலும் அவர் கலந்து கொண்டார்.
இந்த மாநாட்டில் பிரதமர் மோடி பேசும்போது கூறியதாவது:–
உள்ளூர் தொழில்நுட்பம்
இந்தியா–இங்கிலாந்து இடையே வர்த்தக உறவு கடந்த 5 ஆண்டுகளாக வலுவாக உள்ளது. இங்கிலாந்தில் அதிக முதலீடு செய்துள்ள நாடுகளில் 3–வது இடத்தில் நாம் இருக்கிறோம். அதேபோல் ஜி–20 நாடுகள் அமைப்பில் இங்கிலாந்துதான் இந்தியாவில் அதிக முதலீடு செய்துள்ள நாடாகும்.
இத்தகைய உறவில் இந்தியாவில் தயாரிப்போம் திட்டம் முக்கிய அம்சமாக இடம் பெறவேண்டும். ஏனெனில் அறிவியல் என்பது உலகிற்கு பொதுவாக இருந்தாலும் கூட தொழில்நுட்பம் உள்ளூரைச் சார்ந்ததாக இருக்கவேண்டும்.
இங்கிலாந்தில் கல்வி
மற்றும் ஆராய்ச்சி படிப்புகளுக்காக செல்லும் இந்திய மாணவர்களுக்கு விசா பெறுவதற்காக விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை இங்கிலாந்து எளிதாக்கி அவர்களுக்கு ஊக்கம் அளிக்கவேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
வலுவான உறவு
நிகழ்ச்சியில் பேசிய இங்கிலாந்து பிரதமர் தெரசா மே, ‘‘இங்கிலாந்து–இந்தியா இடையே உறவு வலுவாக உள்ளது. அதனால்தான் பிரதமர் பதவியேற்ற பின்பு ஐரோப்பாவுக்கு வெளியே முதல் வெளிநாட்டு பயணமாக இந்தியாவை தேர்ந்தெடுத்தேன். இங்கிலாந்தில் நுழைவதற்கு பதிவு செய்யப்பட்ட பயணி என்னும் புதிய திட்டத்தை ஏற்படுத்தி இருக்கிறோம். இதன்மூலம் இந்தியர்கள் இங்கிலாந்துக்கு எளிதாக வந்து செல்ல முடியும். இந்தியாவில் இருந்து இங்கிலாந்துக்கு பயணம் செய்ய விரும்புவோரில் 10 பேரில் 9 பேருக்கு விசா வழங்கப்படுகிறது’’ என்றார்.
2 ஒப்பந்தங்கள் கையெழுத்து
மாநாட்டைத் தொடர்ந்து பிரதமர் மோடியும், இங்கிலாந்து பிரதமர் தெரசா மேயும், இரு நாடுகள் இடையே தொழில் தொடங்குவதற்கான வழிமுறைகளை எளிதாக்குவது மற்றும் அறிவுசார் சொத்துரிமை துறையில் ஒத்துழைத்து செயல்படுவது பற்றி விரிவான பேச்சுவார்த்தை நடத்தினர்.
பின்னர் இரு தலைவர்களின் முன்னிலையிலும் இது தொடர்பான 2 ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.
பாகிஸ்தானுக்கு கண்டிப்பு
பின்னர் இரு தலைவர்கள் சார்பிலும் கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. அதில் பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஆதரிப்பது குறித்து மறைமுகமாக கண்டிக்கப்பட்டு இருந்தது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:–
பயங்கரவாதம் மனித குலத்துக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. பயங்கரவாதத்தை எவ்விதத்திலும் நியாயப்படுத்த முடியாது. அதை எந்த அடிப்படையின் கீழும் சகித்துக்கொள்ளவும் இயலாது. அனைத்து விதமான பயங்கரவாதத்துக்கு எதிராகவும் நாம் போராடுவோம்.
பயங்கரவாதத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் நாடுகள் மீதும், அவர்களுக்கு அடைக்கலம் அளிக்கும் நாடுகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு ஆதரவாக சில நாடுகள் செயல்படுவது மிகவும் கவலை தரும் விஷயம் ஆகும்.
நீதிக்கு முன் நிறுத்தவேண்டும்
2008–ம் ஆண்டு நவம்பர் மாதம் மும்பையில் நடத்தப்பட்ட பயங்கரவாத செயல்களுக்கு மூளையாக செயல்பட்டவர்கள் மற்றும் 2016–ம் ஆண்டு ஜனவரி மாதம் பதன்கோட் தாக்குதலுக்கு காரணமானவர்களை பாகிஸ்தான் நீதிக்கு முன்பாக கொண்டு வந்து நிறுத்தவேண்டும். உரி ராணுவ முகாம் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலையும் வன்மையாக கண்டிக்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
பெருமைப்படுத்தக்கூடாது
அதேபோல் இந்த கூட்டறிக்கையில் காஷ்மீரில் சுட்டுக்கொல்லப்பட்ட ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்க தளபதி பர்கான் வானியை தியாகி என்று பாகிஸ்தான் வர்ணிப்பதற்கும் மறைமுகமாக கண்டனம் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
‘‘பயங்கரவாதிகளையோ, பயங்கரவாத செயல்களையோ எந்த வகையிலும் பெருமைப்படுத்தக் கூடாது. ஏனெனில் பயங்கரவாதத்தில் நல்ல பயங்கரவாதம், கெட்ட பயங்கரவாதம் என்று எதுவும் கிடையாது. தெற்கு ஆசியாவில் ஸ்திரத்தன்மை, செழிப்பு, பயங்கரவாதம் அல்லாத நிலைமை நிலவிடவேண்டும் என்ற குறிக்கோளுடன் நாம் செயல்படுவோம்’’ என்று அதில் கூறப்பட்டு உள்ளது.