சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவைத் தலைவர் குலாம் நபி ஆசாத், நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வலியுறுத்தி, மாநிலங்களவையில் பாரதிய ஜனதா அமளியில் ஈடுபட்டதால், அவை ஒத்திவைக்கப்பட்டது.
மாநிலங்களவையில் நேற்று பேசிய குலாம் நபி ஆசாத், பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய உரி தாக்குதலைவிட, 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பு கடும் பாதிப்பை ஏற்படுத்திவிட்டதாக தெரிவித்திருந்தார்.
மாநிலங்களவை இன்று கூடியதும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாரதிய ஜனதாவினர் கோஷங்களை எழுப்பினர். 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்பு, நாட்டின் நலன் கருதி எடுக்கப்பட்ட முடிவு எனக் கூறிய அவர்கள், இதனை, உரி தாக்குதலோடு ஒப்பிட்டுப் பேசியிருப்பது கடும் கண்டனத்திற்கு உரியது என எதிர்ப்பு தெரிவித்தனர். பாரதிய ஜனதா கட்சியினரின் இந்த அமளியால் அவையில் கூச்சல் குழப்பம் நிலவியது.
English Summary:
Congress leader Ghulam Nabi Azad told the Rajya controversial comment, apologize to the people of the country, emphasizing the BJP in the Rajya Sabha on the Rampage, which was adjourned.