ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிப்பு ஒரு வாரத்தில் வெளியாகும் என்று, தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழக ஆசிரியர் தகுதி தேர்வுக்கான வெயிட்டேஜ் மதிப்பெண்கள் செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில், தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர், கடந்த மூன்று ஆண்டுகளாக ஆசிரியர் தகுதித் தேர்வு தமிழகத்தில் நடத்தப்படாத நிலையில், இன்னும் ஒரு வாரத்தில் வெளியாகும் என தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய பாடத்திட்டம் தயார் எனவும், எனினும் புதிய பாடத்திட்டம் வரும் கல்வியாண்டில் அறிமுகப்படுத்தப்படாது என்றும் அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன் கூறியுள்ளார்.