புதுடில்லி:தலைநகர் டில்லியில், காற்றில் மாசு கலப்பை தடுக்க, அம்மாநில அரசு தக்க நடவடிக்கை எடுக்கவில்லை, என, தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கண்டனம் தெரிவித்துள்ளது; சாலைகளில் புழுதி எழுவதை தடுக்க, ஹெலிகாப்டர்கள் மூலம், தண்ணீர் தெளிக்கும்படி அறிவுறுத்தி உள்ளது.
டில்லியில், ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக உள்ளார். டில்லி நகரில், காற்றில் மாசு கலப்பு அபாய கட்டத்தில் இருப்பதால், மக்கள் மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவதியுறுகின்றனர்.
நடவடிக்கை:
இதனால், பள்ளிகளுக்கு, மூன்று நாள் விடுமுறை விடப்பட்டுள்ளது. மக்கள், கூடியவரை, வீடுகளிலேயே இருக்கும்படி, மாநில அரசு அறிவுறுத்தி உள்ளது. இந்நிலையில், தேசிய பசுமைத் தீர்ப்பாயத் தலைவர் சுதந்திர குமார் தலைமையிலான அமர்வு கூறியுள்ளதாவது:டில்லியில், காற்றில் புழுதிப்படலம் மண்டிக் கிடப்பதால், எட்டாவது நாளாக, குழந்தைகளும், பெரியவர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலை ஏற்படாமல் தடுக்க, மாநில அரசு, தக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காதது, கண்டனத்துக்கு உரியது. மாசு பிரச்னைக்கு தீர்வு காண, மாநில அரசு, உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். சாலைகளில் புழுதி எழுவதை
தடுக்கும் வகையில், ஹெலிகாப்டர்களை பயன்படுத்தி,
தண்ணீர் தெளிக்க ஏற்பாடு செய்யப்பட வேண்டும்; செயற்கை மழை ஏற்படுத்துவது குறித்தும், மாநில அரசு பரிசீலிக்க வேண்டும்.அண்டை மாநிலங்களான, பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் ஆகியவற்றில், காய்ந்த பயிர்க் கழிவுகளை பெருமளவில் எரிப்பதால், புகை மண்டலம் உருவாகிறது.
இந்த விதிமீறலில் ஈடுபடுவோருக்கு எதிராக,அம்மாநில அரசுகள், தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பஞ்சாப் மாநிலத்தில், 70 சதவீத விவசாய நிலங்களில், பயிர்க் கழிவுகள் எரிக்கப்
படுகின்றன. இதனால், பொதுமக்கள் மூச்சுத் திணறல் ஏற்பட்டு, மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த விஷயத்தில், அம்மாநில அரசுகள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு மாநிலமும், அடுத்த மாநிலம் மீது பொறுப்பை தட்டிக் கழித்து வருகின்றன; இது, கண்டனத்திற்கு உரியது.
டில்லியில், காற்றில் மாசு கலந்துள்ள பிரச்னைக்கு, பயிர்க் கழிவுகளை எரிப்பது தான் காரணம் என்பதை, அமெரிக்காவின், 'நாசா' ஆராய்ச்சி மையம் எடுத்த புகைப்படங்கள் உறுதிப்படுத்துகின்றன. கட்டுமானப் பொருட்களை சாலைகளில் போட்டு வைப்பதை, மாநகராட்சி அதிகாரிகள் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.
காற்றில் மாசு பிரச்னை, அவசர நிலையை போன்று உள்ளது. இந்த பிரச்னையை, மத்திய அரசும், டில்லி அரசும் கண்டு கொள்ளாமல், ஒன்றின் மீது ஒன்று பழிபோடுவதிலேயே குறியாக உள்ளன. இவ்வாறு பசுமைத் தீர்ப்பாயம் கூறியுள்ளது.
சுப்ரீம் கோர்ட் கண்டனம்:
டில்லியில், காற்றில் மாசுகலப்பு விவகாரம் தொடர்பாக, சுப்ரீம் கோர்ட்டால் நியமிக்கப்பட்ட, இ.பி.சி.ஏ., எனப்படும், சுற்றுச்சூழல் மாசு கட்டுப்பாடுஆணையம் மனு தாக்கல் செய்துள்ளது.
அதில், 'காற்றில் மாசு கலப்பை கட்டுப்படுத்த ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை, முறையாக அமல்படுத்த வேண்டும்' என,வலியுறுத்தப்பட்டுள்ளது.
சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி, டி.எஸ்.தாக்குர், நீதிபதிகள் சந்திரசூட், நாகேஸ்வரராவ் ஆகியோர் அடங்கிய அமர்வு, இதை விசாரணைக்கு ஏற்றது. இம்மனு, இன்று விசாரிக்கப்பட உள்ளது.
பழைய வாகனங்களின்அங்கீகாரம் ரத்து:
டில்லியில், சுற்றுச்சூழல் மாசை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, துணை நிலை ஆளுனர் நஜீப் ஜங் தலைமையில், நேற்று ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்: டில்லியில், 15 ஆண்டுகளுக்கு மேல் பழமையான, டீசல் வாகனங்களின் அங்கீகாரம் ரத்து செய்யப்படுகிறது. இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது. இதன் மூலம், டில்லியில், இரண்டு லட்சம் வாகனங்களின் எண்ணிக்கை குறையும். புதிய கட்டுமானப் பணிகள் மற்றும் கட்டட இடிப்பு நடவடிக்கைகளுக்கும், 14ம் தேதி வரை தடை விதிக்கப்படுகிறது. மத ரீதியிலான விழாக்கள் தவிர, வேறெந்த காரணத்திற்காகவும், டில்லியில், பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்படுகிறது. இவ்வாறு முடிவெடுக்கப்பட்டது.