அரசுப்பேருந்துகள் மற்றும் டாஸ்மாக் கடைகளில் வசூலாகும் 50, 100 ரூபாய் நோட்டுக்களை, அதிகாரத்தில் உள்ளவர்கள், தங்களது கருப்பு பணத்தை மாற்ற பயன்படுத்துவதாக, தொழிற்சங்கங்கள் குற்றம் சாட்டியுள்ளன.
பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என கடந்த 8ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இந்நிலையில் அதிகாரத்தில் உள்ளவர்கள், தங்களிடம் கருப்பு பணமாக உள்ள 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை, 50 மற்றும் 100 ரூபாய் நோட்டுக்களாக மாற்றிக் கொள்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கோவை கோட்டத்துக்கு உட்பட்ட திருப்பூர், நீலகிரி, கோவையில் போக்குவரத்துக்கழகம் மூலம் சுமார் ஒரு கோடி ரூபாய் வருவாய் வருவதாகவும், ஊழியர்களை நிர்பந்தித்து அதிகாரம் படைத்த சிலர், 50 மற்றும் 100 ரூபாய் நோட்டுக்களை பெற்றுக் கொள்வதாகவும் புகார் எழுந்துள்ளது. டாஸ்மாக்கிலும் இதே நிலை நீடிப்பதாக கூறப்படுகிறது.