பெங்களூரு: பி.பி.எம்.பி., எல்லைக்குட்பட்ட பெட்ரோல் 'பங்க்'குகள் மற்றும் அரசுக்கு சொந்தமான கட்டடங்களிலும் சேவை கட்டணம் பெறுவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக, வரி மற்றும் நிதிக்குழு தலைவர் குணசேகர் தெரிவித்தார்.'பிருகத் பெங்களூரு மாநகர பாலிகே' என்ற, பி.பி.எம்.பி., வரி மற்றும் நிதிக்குழு தலைவர் குணசேகர், மாநகராட்சி தலைமை அலுவலகத்தில், நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:நடப்பு, 2016 - 17ல், சொத்து வரி, 2,300 கோடி ரூபாய் உட்பட, 3,323 கோடி ரூபாய் வசூலிக்கப்படும் என, பட்ஜெட்டில் தெரிவித்தோம். இதன் படி, இன்று (நேற்று) வரை, 1,534.80 கோடி ரூபாய் சொத்து வரியும், நீதிமன்ற உத்தரவுப்படி, 115 கோடி ரூபாயும் வசூலித்துள்ளோம். செல்லாத ரூபாய் அறிவிப்புக்கு பின், 22 கோடி ரூபாய் வரி கிடைத்துள்ளது. பழைய ரூபாய் நோட்டுகள் மூலம் வரி செலுத்துவோருக்கு, இம்மாதம், 24ம் தேதி வரை அவகாசம் வழங்கப்படுகிறது. வருவாயை பெருக்க, முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். பெங்களூரில் பன்னாட்டு நிறுவனங்களின், 77 வணிக பூங்காக்கள், 51 மால்கள், 4,834 பெரிய தொழிற்சாலைகள், பல பெரிய அபார்ட்மென்ட்கள் உள்ளன. இவர்கள் குறைந்த அளவு சொத்து விவரம் காண்பித்து வரி செலுத்தியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இவற்றை கண்டுபிடிக்க கடந்த ஆண்டு, 'டோடல் சர்வே ஸ்டேஷன்' மூலம், சர்வே செய்யும் சோதனை திட்டத்தில் இறங்கினோம். 10 இடங்களில் செய்த சர்வேயில், 200 கோடி ரூபாய், கூடுதல் வரி கிடைத்தது. இத்திட்டத்தை முழுமையாக அமல்படுத்தி, அதிக வரி வசூல் செய்ய திட்டமிட்டுள்ளோம். 15 நாட்களுக்குள் டெண்டர் பணிகள் ஆரம்பிக்குமாறு, நிதி துறை சிறப்பு கமிஷனருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. வல்லுனர்கள் மற்றும் பி.பி.எம்.பி., அதிகாரிகள் சர்வே மேற்கொள்வர்.அரசியல் கட்சி தலைவர்களுக்கு சொந்தமான இடங்கள் இருந்தாலும், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். ஆன்லைனில் வரி செலுத்துவதில் சில பிரச்னை உள்ளதால், அதை சரி செய்யும்படி, தேசிய தகவலியல் மையத்திடம் கேட்டு கொண்டுள்ளோம். 15 நாட்களுக்குள் சரி செய்து விடுவதாக உறுதியளித்துள்ளனர். சொத்து வரி வசூலிப்பதற்காக, புதன்கிழமை தோறும் மக்கள் குறை தீர்க்கப்படும். நிர்வாக செலவை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி போக்குவரத்து பிரிவில், இன்ஜினியர்களுக்கு கார் மற்றும் பெட்ரோல் செலவுக்கு ஆண்டுக்கு, 22 கோடி ரூபாய் செலவாகிறது. இதை எந்த வகையில் குறைக்க முடியும் என்பதை அறிக்கை தாக்கல் செய்யும்படி, சம்பந்தபட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடபட்டுள்ளது.குடிநீர் மற்றும் வடிகால் வாரியத்துக்கு சொந்தமான காவிரி பவன், மூன்று கோடி ரூபாய் சேவை கட்டணம் பாக்கி வைத்துள்ளது. அத்துறைக்கு சொந்தமாக, 54 சப் - ஸ்டேஷன்களிலும் சேவை கட்டணம் பெறப்படும். பெட்ரோல் பங்குகள், அரசுக்கு சொந்தமான இடங்களிலும் சேவை கட்டணம் பெறுவது குறித்து ஆலோசித்து வருகிறோம். விதான் சவுதாவுக்கு சேவை கட்டணம் பெறுவது குறித்து, அதிகாரிகளை ஆய்வு செய்யும்படி கூறப்பட்டுள்ளது.Pipiempi, bordered petrol bunk and state-owned buildings to be considered with regard to getting service charge, tax and finance committee chairman, said kunacekar.





