மதுரை மாவட்டம் வாடிப்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் கழுதை பால் அமோகமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி, கச்சைகட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் கழுதைகளுடன் அதன் உரிமையாளர்கள் தெருத்தெருவாக சுற்றி கழுதைபால் விற்பனை செய்கின்றனர். ஒரு சங்கு கழுதைப்பால், 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடலூர் மாவட்டத்தை சிலர் வாடிப்பட்டியில் சுமார் 30க்கும் மேற்பட்ட கழுதைகளுடன் முகாமிட்டு சுற்றுவட்டார கிராம பகுதிகளில் பால் விற்பனை செய்து வருகின்றனர்.
குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி பெருகுவது, உடல் சூட்டை தணிப்பது போன்ற மருத்துவகுணம் நிறைந்தது எனக் கூறி கழுதைப்பாலை விற்பனையாளர்கள் விற்று வருகின்றனர். மேலும் ஒரு பருவத்தில் மட்டும்தான் கழுதையிடம் இருந்து பால் கறக்க முடியும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
English Summary:
Palamedu Madurai district and the surrounding rural areas, dramatically in the donkey milk is sold.