சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களை அனுமதிப்பது குறித்த கேரள அரசின் நிலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளது. கோயிலுக் குள் அனைத்து பெண்களுக்கும் அனுமதி அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு மனுத் தாக்கல் செய்துள்ளது.
கேரள மாநிலம் சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோயிலுக்குள் 10 முதல் 50 வயதுடைய பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. இந்த நடைமுறை பல ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வருகிறது. சபரி மலை கோயிலை நிர்வகித்து வரும் திருவிதாங்கூர் தேவஸ்வம் வாரியத்தின் இந்த முடிவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், பெண்களுக்கு அனுமதி மறுக்கப் பட்டது சரி என்று கேரள உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தின் விசாரணையில் இருந்து வருகிறது.
இந்த வழக்கு நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஆர்.பானுமதி, அசோக் பூஷன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது கேரள அரசு சார்பில் புதிய மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ‘சபரிமலை கோயிலுக்குள் நுழைய அனைத்து பெண்களுக்கும் அனுமதி வழங்கப்பட வேண்டும். இது கடந்த 2007-ம் ஆண்டு நவம்பரில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இடதுசாரி தலைமையிலான கூட்டணி அரசின் முடிவுதான். அந்த முடிவில் எந்த மாற்றமும் இல்லை. இருப்பினும், கோயிலை நிர்வகித்து வரும் திருவிதாங்கூர் தேவஸ்வம் வாரியத்தின் முடிவையும் நீதிமன்றம் பரிசீலிக்க வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.
கோயில் நிர்வாகம் எதிர்ப்பு
மாநில அரசின் இந்த முடிவுக்கு கோயில் நிர்வாகம் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஓர் ஆவணத்தில் இடம்பெற்றுள்ள முடிவை ஆட்சி மாற்றம் என்ற பெயரில் மாற்றிக் கொள்வதை அனுமதிக்க கூடாது. இந்த வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற வேண்டும் என்று வாதிடப்பட்டது. இதையடுத்து, வழக்கின் அடுத்த விசாரணையை வரும் பிப்ரவரி 20-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்துள்ளனர்.
கடந்த 2007-ம் ஆண்டு இடதுசாரிகள் கூட்டணியில் அமைந்த முதல்வர் வி.எஸ்.அச்சுதானந்தன் தலைமையிலான கேரள அரசு, பெண்களை அனுமதிக்க வேண்டும் என்ற முடிவை எடுத்து உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது. கடந்த 2011-ம் ஆண்டு கேரளாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு காங்கிரஸ் கூட்டணியில் முதல்வர் உம்மன் சாண்டி தலைமையிலான அரசு வந்தபோது, சபரிமலை கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்க கூடாது என்று வாதிடப்பட்டது. தற்போது மீண்டும் இடதுசாரி கூட்டணி அரசு அமைந்து பினராயி விஜயன் முதல்வராக பொறுப்பேற்றுள்ள நிலையில் கேரள அரசு தனது முடிவை மீண்டும் மாற்றிக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.