மும்பை: விஜய் மல்லையாவுக்கு எதிராக ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஓட்டம்:
வங்கிகளில் கடன் வாங்கியுள்ள விஜய் மல்லையா, அதை திருப்பி செலுத்துவதில் கால தாமதம் செய்தார். கிங் பிஷர் நிறுவனம், தலைமை நிதி ஆலோசகர் ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் கைது செய்யப்படும் சூழ்நிலை உருவானது. இதனையடுத்து மல்லையா லண்டன் தப்பிசென்றார். அவர் மீது வங்கிகள் , அமலாக்கத்துறை, சி.பி.ஐ., சார்பில் வழக்கு தொடரப்பட்டது. மல்லையாவுக்கு சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 10 மாதங்களாக சம்மன் அனுப்பியும் அவர் நேரில் ஆஜராகவில்லை.
நாடு கடத்த நடவடிக்கை:
இந்நிலையில், சி.பி.ஐ., தொடர்ந்த வழக்கு ஒன்றில் விஜய் மல்லையாவுக்கு எதிராக சி.பி.ஐ., சிறப்பு கோர்ட் ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரன்டை பிறப்பித்துள்ளது. இதனை தொடர்ந்து, மல்லையாவை நாடு கடத்துவதற்கான ஆரம்ப கட்டபணிகள் துவக்கப்பட்டுள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இது தொடர்பான ஆவணங்கள் உள்துறை அமைச்சகம், வெளியுறவு அமைச்சகம், இங்கிலாந்தில் உள்ள அதிகாரிகளுக்கு அனுப்பப்பட உள்ளதாக சி.பி.ஐ., வட்டாரங்கள் தெரிவித்தன.
English Summary:
Arest Warrant released on bail, can not be issued against Vijay Mallya.