ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து நாடு முழுவதும் வங்கிகள் மற்றும் ஏ.டி.எம்.களில் பணம் எடுக்க மக்கள் குவிந்து வருகின்றனர். வங்கிகளில் பணம் எடுக்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் நாளையிலிருந்து 2000 ரூபாய் மட்டுமே மாற்ற முடியும் என மத்திய அரசு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
இதனால் நாட்டு மக்களிடையே பணத்தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்நிலையில் ஓலா டாக்சி நிறுவனம் தனது வாடிக்கையாளர்களின் நலன் கருதி புதிய வசதி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி வாடிக்கையாளர்கள் ஓலா டாக்சியில் பயணம் செய்தால் அந்தக் கட்டணத்தை உடனடியாக செலுத்த வேண்டியதில்லை. ஒரு வாரம் கழித்து அதற்கான கட்டணத்தை செலுத்தலாம். ’ஓலா கிரடிட்’ என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த திட்டத்தின் கீழ், வாடிக்கையாளர்கள் கார்களை முன்பதிவு செய்து கொள்ளலாம்.
ஓலா நிறுவனத்தின் மொபைல் அப்ளிகேஷன் மூலம் கார்களைப் பதிவு செய்துவரும் வாடிக்கையாளர்கள் மற்றும் நிறுவனங்கள் உள்ளிட்டவைகளுக்கு இந்த சேவையை வழங்க உள்ளதாக தெரிவித்துள்ள ஓலா, இதற்கான கட்டணத்தை பயணம் செய்த 7 நாட்களுக்குள் ஓலா மணி, இண்டர்நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங் உள்ளிட்ட வழிகளில் செலுத்தலாம் என்று கூறியுள்ளது.
Summary : Change currency note: Ola provide credit support to customers