தமிழர்களின் வாழ்வியலோடு ஒன்றிணைந்தது பனைமரம். இந்தியாவில் 10.2 கோடி பனை மரங்கள் உள்ளன. இவற்றில் 5 கோடி பனைமரங்கள் தமிழ்நாட்டில் உள்ளன. தமிழ்நாடு, இலங்கை, மலேசியா என தமிழர்கள் வாழும் பகுதிகளில் பனை மரங்கள் அதி கமாக காணப்படுகின்றன.
மற்ற மரங்கள் வேர்களை பக்கவாட்டில் பரப்பும். ஆனால் பனைமரங்கள் வேர்களை செங் குத்தாக நிலத்தடி நீர் மட்டம் செல்லும் பாதையை நோக்கி கீழ் நோக்கிச் செலுத்தும். அந்த நீரை உறிஞ்சி மேற்பரப்பில் கொண்டு வந்து பூமியின் மேற்பரப்பில் நிலத் தடி நீர்வழிப்பாதை ஊற்று எடுப் பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனால்தான் விவசாய நிலங்க ளுக்கு அருகேயும், கிணறுகளுக்கு அருகேயும் பனைமரங்களை நடுகின்றனர்.
இந்த பனைமரங்கள் தற்போது அழிந்து வருகின்றன. ஆனால் செங்கல்பட்டு-திருப் போரூர் செல்லும் சாலைகளில் நெடுஞ்சாலை ஓரங்களில் ஏராள மான பனை மரங்கள் பாதுகாப் பாக வளர்க்கப்பட்டுள்ளன. நெடுஞ் சாலைத் துறையினரின் இந்த நடவடிக்கைக்கு இயற்கை ஆர்வ லர்களும், பொது மக்களும் பாராட்டு தெரிவித்துள்ளனர். இதுபோல் மற்ற பகுதிகளிலும் சாலையோரங்களில் பனை மரங்களை நட்டு பாதுகாக்க நெடுஞ் சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து செங்கல்பட்டு உத விக்கோட்ட பொறியாளர் சிவசே னாவிடம் கேட்டபோது, ‘திருப்போ ரூர்-செங்கல்பட்டு சாலையில் 11 கி.மீ தூரத்துக்கு பனைமரங்கள் உள்ளன. இவை நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமானவை. ஒரு சில மரங்கள் பட்டா இடத்திலும் உள்ளன. பல ஆண்டுகளுக்கு முன்பே இந்தப் பனைமரங்கள் வைத்து வளர்க்கப்பட்டுள்ளன.
சாலை விரிவாக்கத்துக்காக மரங்கள் வெட்டப்படுகின்றன. மரங்கள் வெட்டப்பட்டால் அந்தப் பகுதியில் புதிதாக மரங்களை நட வேண்டும் என்று அரசு வலியுறுத் தியுள்ளது. எங்கள் கோட்டத்தில் 1500 மரக்கன்றுகளை நடுவதற்கு அரசு இலக்கு நிர்ணயித்துள்ள து. அதன்படி நாங்கள் இதுவரை 900 மரக்கன்றுகளை நட்டுள்ளோம். நாங்கள் பெரும்பாலும் வேப்பம ரங்கள், புங்கை மரங்கள், பாதாம் மரங்களைத்தான் நட்டுள்ளோம். பனைமரங்களை நடும்படி குறிப்பான உத்தரவுகள் எதுவும் இல்லை’ என்று தெரிவித்தார்.
இதுகுறித்து விவசாயியும், அரசியல் கட்சியைச் சேர்ந்தவ ருமான அவளூர் ஜி.சீனுவாசனிடம் கேட்டபோது, ‘பனைமரம் விவா யிகளுக்கு நன்மை செய்வதுடன் உணவுப் பொருளான பதநீர், நுங்கு, கருப்பட்டி, வெல்லம், பனஞ்சீனி, பனங்கற்கண்டு, பனங் கூழ் என பல்வேறு உணவுப் பொருட்களையும் தருகிறது.
இந்த பனையில் இருந்து தூரி கைகள், கழிகள், பனையோலைப் பொருட்கள், அலங்காரப் பொருட் கள், மரப் பொருட்கள் போன்ற வையும் தயாரிக்கப்படுகின்றன. அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மன், இத்தாலி, பெல்ஜியம், பிரான்ஸ், ஆஸ்திரேலியா, ஜப்பான் போன்ற நாடுகளுக்கு பனைப் பொருட்களை ஏற்றுமதி செய்வதன் மூலம் இந்தியாவுக்கு ஆண்டுதோறும் ரூ.200 கோடிக்கு மேல் அந்நிய செலாவணி கிடைக்கிறது.
லட்சக்கணக்கான தொழிலாளர் களுக்கு வேலைவாய்ப்பையும் அளிக்கிறது. சாலை விரிவாக்கத் துக்காக வெட்டப்படும் மரங்க ளுக்கு மாற்றாக மரக்கன்றுகளை நடும்போது பனைமரங்களையும் நடுவதற்கு நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். பனை மரம், மாநில மரமாக இருப்பதால் பனை மரங்கள் வளர்ப்பதை அரசும், அரசு சாரா நிறுவனங்களும் இயக்கமாக நடத்த வேண்டும்’ என்று அவர் வலியுறுத்தினார்.

காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு-திருப்போரூர் செல்லும் சாலைகளில் நெடுஞ்சாலையின் ஓரம் வளர்க்கப்பட்டுள்ள பனைமரங்கள்.