வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் தொடர்பாக நியூ ஃபாக்ஸ் நியூஸ் சானல் நடத்திய கருத்துக்கணிப்பில் ஹிலாரி கிளிண்டன் முன்னிலை பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது. உலகமே எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் அமெரிக்காவில் 45வது அதிபர் பதவிக்கான தேர்தல் இன்று நடைபெற உள்ளது.
இந்த தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளராக ஹிலாரி கிளிண்டன், குடியரசுக் கட்சியின் வேட்பாளராக டொனால்டு டிரம்ப் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
இரு தினங்களுக்கு முன்பு வெளியான கருத்துக்கணிப்பில் ஹிலாரி கிளின்டன் தொடர்ந்து முன்னிலை வகித்து வருவதாக கூறப்பட்டிருந்தது. பல்வேறு ஊடகங்கள் நவம்பர் 2ம்தேதி வரை வெளியிட்ட கருத்துக் கணிப்பில் தொடர்ந்து ஹிலாரியே முன்னிலை பெற்றுள்ளார் என்று கூறியது.
பிபிசி வெளியிட்ட கருத்துக் கணிப்பில் 48 சதவீத வாக்குகளுடன் ஹிலாரி முன்னிலை பெற்றிருந்தார். டிரப்புக்கு 46 சதவீத வாக்குகள் கிடைக்கும் என கணிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் அதிபர் தேர்தல் தொடர்பாக நியூ ஃபாக்ஸ் நியூஸ் சானல் நடத்திய கருத்துக்கணிப்பு நேற்று வெளியாகியது. இதில் ஹிலாரிக்கு 48 சதவீதம், டிரம்பிற்கு 44 சதவீதம் பேர் ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர்.