இந்தியப் பெருங்கடலை ஒட்டியுள்ள பகுதியில் நிலைகொண்டுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக தென்தமிழகத்தில் திங்கள்கிழமை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தாவது:
மத்திய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் கடந்த 17 -ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுபகுதி உருவானது. இது தென்மேற்காக நகர்ந்து பலவீனமடைந்து மேலடுக்கு சுழற்சியாக மாறி, இந்தியப் பெருங்கடல் பகுதியை ஒட்டி நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக திங்கள்கிழமை தென்தமிழகத்தில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது.
குறிப்பாக கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, ராமநாதபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை பெய்யும். பிற தென் மாவட்டங்களிலும் வட கடலோர மாவட்டங்களில் ஓரு சில இடங்களிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையை பொறுத்தவரையில் வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் ஆங்காங்கே மழை பெய்வதற்கான வாய்ப்பும் உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் ராமேசுவரம், பாம்பன், குழித்துறை ஆகிய இடங்களில் தலா ஒரு செ.மீ. மழை பெய்துள்ளது.
வழக்கமாக நவம்பர் மாதம் வடகிழக்கு பருவமழை தீவிரமாக இருக்கும். ஆனால் இந்த ஆண்டு இதுவரை குறிப்பிட்டு சொல்லும் அளவில் வடகிழக்கு பருவமழை பெய்யவில்லை. இனி வரும் நாள்களில் மழை பெய்தால்தான் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாமல் சமாளிக்க முடியும்.
English Summary : Overlay cycle: the possibility of heavy rain in southern districts.Stationed in an area bordering the Indian Ocean in South Tamil Nadu on Monday, heavy fall is likely due to the rotation of the overlay. Especially in Tuticorin, Kanyakumari, Tirunelveli and Ramanathapuram districts that heavy rains in Chennai Weather Survey said.