சண்டிகர்:சட்லஜ் - யமுனை கால்வாய் விவகாரத்தில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துள்ளது திட்டமிட்ட நாடகம் என பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து மொஹாலியில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது:சட்லஜ் - யமுனை கால்வாய் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பானது பஞ்சாபுக்கு எதிரான நடவடிக்கை ஆகும். இந்த உத்தரவை சிரோமணி அகாலி தளம் - பாஜக கூட்டணி அரசு எதிர்க்கிறது.இந்த விவகாரம் தொடர்பாக பஞ்சாப் அரசு தனது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது. எத்தகைய உத்தரவு பிறப்பிக்கப்பட்டாலும் பஞ்சாபிலிருந்து ஒரு சொட்டு தண்ணீரைக் கூட அண்டை மாநிலங்களுக்கு வழங்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.
காங்கிரசின் நாடகம்:
இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி ராஜினாமா நாடகமாடுகிறது. பஞ்சாப் மக்கள் மீது உண்மையான அக்கறை இருந்தால், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடாமல் அமரீந்தர் சிங் புறக்கணிப்பாரா? என பாதல் கேள்வியெழுப்பியுள்ளார்.