500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பைக் கண்டித்து சென்னையில் இளைஞர் ஒருவர் செல்போன் டவர் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
கடலூர் மாவட்டம் மழவராயன்நல்லூர் கிராமத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவர், சென்னையில் தனியார் வாடகை கார் நிறுவனத்தில் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்னும் மத்திய அரசின் அறிவிப்பை கண்டித்து சென்னை- அண்ணா மேம்பாலம் அருகே திடீரென செல்போன் டவர் மீது ஏறி ரவிச்சந்திரன் போராட்டத்தில் ஈடுபட்டார்.
தகவல் அறிந்த போலீசார், அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை திரும்ப பெற வேண்டும், டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி துண்டு பிரசுரங்களை வீசினார்.
இதனால் அந்தப் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து செல்போன் டவர் மீது ஏறிய தீயணைப்பு வீரர்கள், ரவிச்சந்திரனை பத்திரமாக மீட்டனர். பின்னர் ரவிச்சந்திரனை போலீசார் கைது செய்து விசாரணைக்காக அழைத்து சென்றனர்.
English Summary:
500, 1000 announced that valid banknotes in Chennai condemning the protesting young man climbed on the cell phone tower caused a stir.