கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டார் அருகே உள்ள குட்டைகாடு பாலவிளை பகுதியைச் சேர்ந்தவர் சுரேந்திரன்(37). இவர் மனைவி சிஜிமோள். இவர்களுக்கு சுஸ்வின் சிஜோ(12), சுஜிலின் ஜோ(9), சுஷ்விகா மோள்(4) ஆகிய மூன்று குழந்தைகள் உண்டு. கூலித் தொழிலாளியான சுரேந்திரன் தினமும் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வருவாராம். மதுபோதையில் சுரேந்திரன் தன் மனைவி சிஜிமோளிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்திருக்கிறார். இந்த நிலையில், சுரேந்திரன் நேற்று முன்தினம் இரவு அதிகமாக மது குடித்துவிட்டு வீட்டில் மனைவியிடம் தகராறில் ஈடுபட்டிருக்கிறார். மேலும் குழந்தைகளையும் தாக்க பாய்ந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் பயந்துபோன மூன்று குழந்தைகளும் வீட்டுக்கு அருகே உள்ள ரப்பர் தோட்டத்துக்குள் புகுந்து இருட்டில் பதுங்கியிருக்கின்றனர்.கைதான சுரேந்திரன்
ரப்பர் தோட்டத்தில் பதுங்கிய 4 வயது குழந்தையான சுஷ்விகா மோளை விஷ பாம்பு ஒன்று கடித்திருக்கிறது. இதனால் குழந்தை அலறித் துடித்திருக்கிறாள். பின்னர் விஷம் பரவி குழந்தை பரிதாபமாக உயிரிழந்தாள். இது அந்தப் பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் சுஸ்வின் சிஜோ, சுஜிலின் ஜோ ஆகிய இரண்டு குழந்தைகளும் தங்கள் தந்தை தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வருவதாகவும், அதனால் தங்களுக்கு பயமாக இருப்பதாகவும் அழுதுகொண்டே கூறிய வீடியோவை சிலர் சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர்.போலீஸ் விசாரணை
இதையடுத்து குழந்தை பாம்பு தீண்டி இறந்த சம்பவம் குறித்து திருவட்டார் போலீஸார் விசாரணை நடத்தினர். பின்னர் குழந்தைகளின் தாய் சிஜிமோள் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீஸார், மது குடித்துவிட்டு தகராறு செய்த குழந்தைகளின் தந்தை சுரேந்திரனைக் கைதுசெய்தனர். தந்தையின் மதுப்பழக்கத்தால் பிஞ்சு குழந்தையின் உயிர் பறிபோன சம்பவம் குமரியில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தூத்துக்குடி: மதுபோதையில் தண்டவாளத்தில் உறக்கம் - மோதிய சரக்கு ரயில்; உடல் நசுங்கி 2 பேர் பலி!
http://dlvr.it/SSF6LC
Wednesday 15 June 2022
Home »
» போதையில் தாக்கப் பாய்ந்த தந்தை; பயத்தில் ரப்பர் தோட்டத்தில் பதுங்கிய குழந்தை பாம்பு தீண்டி பலி!