காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாரத் ஜோடோ யாத்திரை மேற்கொண்டு மக்களைச் சந்தித்துவருகிறார். இதில் ராகுல் காந்தி தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிராவையடுத்து தற்போது மத்தியப் பிரதேசத்தில் யாத்திரை மேற்கொண்டிருக்கிறார். அதன் ஒருபகுதியாக ராகுல் காந்தி இன்று இந்தூர் வந்தடைந்தார்.ஜோடோ யாத்ரா - ராகுல் காந்தி
இந்த நிலையில், அடையாளம் தெரியாத நபரால், `உங்கள் தந்தை இருக்குமிடத்துக்கே நீங்களும் அனுப்பப்படுவீர்கள்' என ராகுல் காந்திக்கு கொலைமிரட்டல் கடிதம் வந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்த அந்தக் கடிதத்தில் ராகுல் காந்திக்கு, ``இந்தூரில் பல இடங்களில் குண்டுவெடிப்புகள் நடக்கும். கமல்நாத் சுட்டு வீழ்த்தப்படுவார், உங்கள் தந்தை ராஜீவ் காந்தி இருக்கும் இடத்துக்கு நீங்களும் அனுப்பப்படுவீர்கள்" எனக் கூறப்பட்டிருக்கிறது.ராகுல் காந்தி
இந்தக் கடிதம் இந்தூர் காவல் நிலைய பகுதியிலிருக்கும் ஒரு இனிப்புக்கடையிலிருந்து போலீஸாரால் கைப்பற்றப்பட்டிருக்கிறது. அதைத் தொடர்ந்து போலீஸார் அந்தப் பகுதியிலிருக்கும் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்துவருகின்றனர். மேலும், கடிதத்தை அங்கு வைத்த நபரை குற்றப்பிரிவு போலீஸார் தேடி வருகின்றனர்.1942... 2022... ஜோடோ யாத்திரையில் இணைந்த `வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தில் கலந்து கொண்ட மூதாட்டி!
http://dlvr.it/Sd1vbK
Saturday 19 November 2022
Home »
» ம.பி: ஜோடோ யாத்திரை மேற்கொள்ளும் ராகுல் காந்திக்குக் கொலை மிரட்டல்! - மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு