மத்திய பிரதேச மாநிலம் சஹோரே மாவட்டத்தில் உள்ள அஸ்தா என்ற நகரத்தில் படிக்கும் 16 வயது பெண்ணும், இந்தூரை சேர்ந்த ஒரு வாலிபரும் சமூக வலைதளம் மூலம் பழக்கமாகி, இருவரும் காதலிக்க ஆரம்பித்துள்ளனர். திடீரென அந்த வாலிபர் இந்தப் பெண்ணிடம் போனில் பேசுவதைத் தவிர்த்தார். கால் செய்தாலும் போனை எடுத்துப் பேசவே இல்லை. இதனால், தன் காதலனை தேடி இந்தூருக்கு செல்ல அப்பெண் முடிவு செய்தார். அவர் வகுப்பில் படிக்கும் இரண்டு தோழிகளும் அவருடன் வருவதாகத் தெரிவித்தனர். மூவரும் பள்ளிக்குச் செல்வதாக வீட்டில் சொல்லிவிட்டு இந்தூருக்கு வந்தனர். suicideதற்கொலை எண்ணம் தோன்றுகிறதா? உடனே செய்ய வேண்டியது என்ன? | #VisualStory
அவர்கள், அங்குள்ள பூங்கா ஒன்றில் நின்றுகொண்டு சம்பந்தப்பட்ட வாலிபருக்கு, போன் செய்திருக்கின்றனர். அந்தப் பெண், தான் இந்தூர் வந்திருக்கும் தகவலை தெரிவித்து, தன்னை வந்து பார்க்கும்படி கேட்டுக்கொண்டார். ஆனால், நீண்ட நேரமாகியும் அந்த வாலிபர் அவரைப் பார்க்க வரவே இல்லை. ஏற்கெனவே, காதலன் தன்னுடன் பேசவில்லை எனில் தற்கொலை செய்யப்போவதாகக் கூறி விஷம் வாங்கி வைத்திருந்த அப்பெண், காதலன் வராததால் விஷத்தைக் குடித்தார். உடனே மற்றொரு பெண்ணும், தன் குடும்பத்தில் பிரச்னை இருக்கிறது என்று கூறி விஷத்தைக் குடித்தார். மூன்றாவது பெண் அவர்கள் இருவருக்கும் நெருங்கிய தோழி என்பதால் அவரும் விஷத்தைக் குடித்தார்.
மூவரும், விஷம் குடித்ததும் சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தனர். உடனே பூங்காவில் இருந்தவர்கள் மூன்று பேரையும் மருத்துவமனையில் சேர்ந்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பலனலிக்காமல் இரண்டு பெண்கள் இறந்துவிட்டனர். ஒருவர் மட்டும் சிகிச்சை பெற்று வருகிறார். அவரிடம் விசாரணை நடத்தியதில்தான், மேற்கண்ட தகவல்கள் கிடைத்திருக்கின்றன.
இது குறித்து போலீஸ் அதிகாரி பிரசாந்த் கூறுகையில், `தற்கொலை செய்துகொண்ட பெண்கள், கடிதம் எதையும் எழுதி வைத்திருக்கவில்லை. சிகிச்சை பெற்று வரும் பெண் கொடுத்துள்ள வாக்குமூலத்தின் அடிப்படையில்தான் விசாரித்து வருகிறோம்’ என்றார்.
http://dlvr.it/Sc2G6W
Tuesday 1 November 2022
Home »
» காதலனைத் தேடி தோழிகளுடன் சென்ற பள்ளி மாணவி; காதலன் பேசாததால் விஷம் குடித்ததில் இருவர் உயிரிழப்பு!