1998 கோவை குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களின் படங்களுக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில், ``2022 தமிழ்நாட்டுக்கு மோசமான ஆண்டு. சுதந்திரத்துக்குப் பிறகு தமிழ்நாட்டில் அதிக அளவு குற்றங்கள் நடந்தது அந்த ஆண்டுதான். தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு, 2022-ம் ஆண்டு மட்டும் 192 முதியவர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். அண்ணாமலைகாவலரைத் தாக்கி தப்பிக்க முயன்ற கோவை கொலையாளிகள் - துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த போலீஸ்!
அந்த ஆண்டு நாட்டிலேயே முதியவர்கள் அதிக அளவு கொல்லப்பட்டது இங்குதான். நாட்டையே அதிரவைத்த கோவை குண்டு வெடிப்புச் சம்பவம் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டது. இது தமிழ்நாட்டு மக்களுக்கு உதவாத ஆட்சி.
ஒரு குடும்பத்துக்காக இருக்கக்கூடிய கட்சி. தி.மு.க சரிவை நோக்கிச் செல்லத் தொடங்கிவிட்டது. விடியல் கேட்டோம். மடியல் கொடுத்திருக்கின்றனர். கோவையில் நடந்த கொலை வழக்கில் துப்பாக்கியே பயன்படுத்தவில்லை என்பதைப்போல காவல்துறை மறைக்கப் பார்க்கிறது. அண்ணாமலை
வீட்டுக்குள் சென்று தப்பிக்க முயன்றவரை, வாய்க்குள் துப்பாக்கியைவிட்டு சுட்டிருக்கின்றனர். அன்றைய ஒரு நாள் மட்டும் தமிழ்நாடு முழுவதும் 9 கொலைகள் நடந்திருக்கின்றன. காவல்துறை சரியாகச் செயல்படுவதில்லை.
தி.மு.க ஆட்சிக்கு வந்த புதிதில் ஹெல்மெட், முகமூடி போட்டு கொலைசெய்து வந்தனர். இப்போது தைரியமாக முகத்தைக் காட்டி, 5 நிமிடங்கள் அந்த இடத்தில் நின்று பைக்கில் செல்கின்றனர். ரௌடிகள்கள்கூட தி.மு.க அரசை மதிப்பதில்லை. போலீஸ் பிடித்தால்கூட தி.மு.க ஒன்றியச் செயலாளர்களை வைத்து வெளிவந்துவிடுவோம் என்ற நம்பிக்கையில் சுற்றிக்கொண்டிருக்கின்றனர். கோவை கொலைக் குற்றவாளிகள்
பா.ஜ.க எதைச் சொன்னாலும், அதை எதிர்த்து செயல்பட்டால்தான் வலிமையான தலைவர் எனக் காட்டிக் கொள்ளலாம் என ஸ்டாலினுக்கு மன பிராந்தி இருக்கிறது. எத்தனை நாளைக்கு எதுவும் நடக்காததுபோல மறைப்பீர்கள்.
மக்களின் உயிரைக் காப்பாற்ற லாயக்கில்லாத அரசு. இது வீழத்தான் போகிறது. 2024 நமக்கு முக்கியமான ஆண்டு. இங்கிருந்து அதிக எம்.பி-க்களை டெல்லிக்கு அனுப்ப வேண்டும். 20 ஆண்டுகளாகிவிட்டன. கோவையில் திரும்பி பா.ஜ.க வேட்பாளர் வர வேண்டும். கோவையிலிருந்து தேசியத்தைப் பேசக்கூடிய எம்.பி-யை நாடாளுமன்றத்தில் அமரவைக்க வேண்டும்.கோவை கொலை குற்றவாளிகள்
மத்திய அரசின் முழுப் பார்வையை கோவை மாநகருக்கு கொண்டுவர வேண்டும். மக்களை அரசியல் பேசவைத்து, நல்லவர்களை ஆட்சியில் அமரவைக்க வேண்டும்” என்றார்.
பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, “ஈரோடு இடைத்தேர்தலில் எல்லாவிதமான அநியாயங்களையும் ஆளுங்கட்சி அரங்கேற்றிவருகிறது. மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு புகார் அனுப்பியிருக்கிறோம். கடந்த வாரம் எல்லா வீடுகளுக்கும் 2 கிலோ மட்டன் இலவசமாகக் கொடுத்தனர். இன்று புடவை கொடுத்திருக்கின்றனர். மக்களைப் பட்டி பட்டியாக அடைத்துவைத்திருக்கின்றனர்.ஈரோடு இடைத்தேர்தல்
அரவக்குறிச்சி, திருமங்கலம் மாடல்களை இணைத்து பட்டி மாடலாக சிலர் ஈரோட்டில் இறங்கியிருக்கின்றனர். சாமானிய மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுக்கொண்டிருக்கிறது. கோவையில் என்ன நடக்கிறது என்று கேட்கக்கூட ஓர் அமைச்சர் இல்லை. ஈரோட்டில் எவ்வளவு காசு கொடுக்கலாம் என்பதில்தான் கவனம் செலுத்துகின்றனர்” என்றார். "கொலை நகரமாகிக்கொண்டிருக்கும் கோவை; காவல்துறையின் கைகள் கட்டப்பட்டிருக்கின்றன'' - அண்ணாமலை
http://dlvr.it/SjRX9T
Wednesday 15 February 2023
Home »
» ``ரௌடிகள்கூட திமுக அரசை மதிப்பதில்லை!" - அண்ணாமலை தாக்கு