இந்தியாவின் அண்டை நாடான சீனா, இரு நாடுகளுக்கிடையிலான எல்லைப்பகுதியில் அடிக்கடி அத்துமீறல், நில ஆக்கிரமிப்பு போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டுவருகிறது. இதைக் கட்டுப்படுத்த கடந்த சில நாள்களுக்கு முன்பு மத்திய அரசு சில திட்டங்கள் வகுத்து அதற்கான ஒப்புதலை வழங்கியது. இப்படியிருந்தும் கடந்த வாரம், இந்திய எல்லையில் இருக்கும் அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில், இரண்டு நிலப்பரப்புப் பகுதிகள், இரண்டு ஆறுகள், இரண்டு குடியிருப்புப் பகுதிகள், ஐந்து மலைப் பகுதிகள் என 11 இடங்களை `தெற்கு திபெத்' எனக் குறிப்பிட்டு சீனா பெயர் மாற்றம் செய்தது.இந்தியா - சீனா
இதற்கு முன்னர் 2014, 2017-ம் ஆண்டுகளில், இதே போன்றே சீனா பெயர் மாற்றம் செய்திருந்தது. தற்போது மூன்றாவது முறையாக சீனா இப்படி செய்திருக்க, `அருணாச்சலப் பிரதேசம் எப்போதும் இந்தியாவின் பகுதியாகவே இருக்கும். சில பெயர்களை மாற்றுவதால் இந்த நிலை மாறிவிடாது' என மத்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்திருந்தார்.
இப்படியான சூழலில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஏப்ரல் 10, 11 ஆகிய தேதிகளில் அருணாச்சலப் பிரதேசத்துக்குச் சென்று இந்திய - சீன எல்லையிலிருக்கும் கிபித்தூ என்ற கிராமத்தில் `Vibrant Villages Programme' எனும் திட்டத்தைத் தொடங்குவார் என அறிவிப்பு வெளியானது. இந்த நிலையில், அமித் ஷாவின் இந்தப் பயணத்துக்கு சீனா கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருந்தது.அமித் ஷா, சீனா
இது குறித்து செய்தியாளர்களிடம் இன்று பேசிய சீன வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் (Wang Wenbin), ``ஜாங்னான் (Zangnan) சீனாவின் பகுதி. இந்திய அதிகாரி (அமித் ஷா) இங்கு வருவது, சீனாவின் பிராந்திய இறையாண்மையை மீறுவதாகும். மேலும், எல்லைப் பகுதியின் அமைதிக்கு உகந்தது அல்ல" என்று கூறினார்.அருணாச்சலப் பிரதேசத்தின் 11 இடங்களுக்குப் பெயர் மாற்றம் செய்த சீனா - இந்தியா பதிலடி!
http://dlvr.it/SmHyBH
Tuesday 11 April 2023
Home »
» அருணாச்சலப் பிரதேசத்துக்குச் சென்ற அமித் ஷா; எச்சரித்த சீனா! - காரணம் என்ன?