``ஓ.பன்னீர்செல்வம் என்னை சந்திக்க நேரம் கேட்டால், சந்திப்பேன்” - சசிகலா
அதிமுக-வில் ஒற்றைத் தலைமை விவகாரம் இன்னும் புகைந்து கொண்டிருக்கும் நிலையில், சசிகலா தீவிர அரசியலில் இருந்து விலகியே இருக்கிறார். இந்நிலையில் இந்த மாதம் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் திருச்சியில் பிரம்மாண்ட மாநாடு ஒன்றை நடத்தப்பட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மாநாட்டிற்கு சசிகலா உள்ளிட்டவரையும் அழைக்க திட்டமிடப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டிருந்தது.சசிகலா
இந்த நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த சசிகலா, ``நான் எல்லோருக்கும் பொதுவான தலைவர். அதிமுக-வில் நான் சாதி பார்த்ததில்லை. நான் சாதியை பார்த்து இருந்தால் கவுண்டர் சமூகத்தை சேர்ந்த ஒருவரை தமிழகத்தின் முதல்வராக ஆக்கியிருப்பேனா?” என அவர் கேள்வி எழுப்பினார். மேலும், ``ஓ.பன்னீர்செல்வம் என்னை சந்திக்க நேரம் கேட்டால் ஒதுக்கி கொடுப்பேன். மாநாட்டில் கலந்து கொள்வது குறித்து அழைப்பு விடுக்கப்பட்டால் அதன் பிறகு முடிவெடுக்கப்படும்” என்றார்.
`என்னை மாற்ற வேண்டுமென்றால் டெல்லிக்குச் செல்லுங்கள்!’ - அண்ணாமலை
சென்னையில் திமுக-வினரின் சொத்துப் பட்டியலை வெளியிட்டு பேசிவரும் அண்ணாமலை, ``நான் தமிழக பாஜக தலைவராக இருக்கும் வரை இப்படித்தான் செயல்படுவேன். என்னை மாற்ற வேண்டுமென்றால் டெல்லிக்குச் சென்று முறையிடுங்கள். யார் தயவிலும் நாடாளுமன்ற உறுப்பினராக வேண்டும் என்கிற அவசியம் எனக்கு இல்லை” என்றார்.
`அதிமுக-வினரின் ஊழல் பட்டியலும் வெயிடப்படும்!’ - அண்ணாமலை
திமுக-வினரின் சொத்துப் பட்டியலை வெளியிட்டுப் பேசிவரும் அண்ணாமலை, ``பிரதமர் சென்னைக்கு வரும்போது, நான் டெல்லியில் இருந்தது குறித்துக் கேள்வி எழுப்புகிறார்கள். பிரதமர்தான் என்னை டெல்லியிலிருந்து கர்நாடகா தேர்தல் பணிகளை கவனிக்கச் சொன்னார். அதனால்தான் வரவில்லை. 2024 தேர்தலுக்கு முன்பு தமிழ்நாட்டை ஆண்ட அத்தனை கட்சிகளின் ஊழல் பட்டியலும் வெளியிடப்படும். அதிமுக-வினரின் ஊழல் பட்டியலும் வெளியிடப்படும். ஊழலை எதிர்க்க நினைத்தால் ஒரு கட்சியை மட்டும் எதிர்க்க முடியாது. மொத்தமாகத்தான் எதிர்க்க வேண்டும்” என்றார்.
அண்ணாமலை வெளியிட்ட பட்டியல்:
சென்னை பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் திமுக கட்சிக்காரர்களின் சொத்துகள் குறித்தும், அமைச்சர்களின் முறைகேடுகள் குறித்தும் தகவல்கள், செய்திகளின் படங்கள் இடம்பிடித்திருந்தன.
தொடர்ந்து முழுமையான தகவல்களெல்லாம் https://enmannenmakkal.com/ என்னும் இணையதளத்தில் இருக்கின்றன எனவும் தெரிவிக்கப்பட்டது. இது அவர்களின் சொத்து மற்றும் அதன் மதிப்புகள் அடிப்படையில் உருவாக்கப்பட்டது எனவும் அண்ணாமலை தெரிவித்தார். அந்தப் பட்டியலில் ஜெகத்ரட்சகன், வேலு, கே.என்.நேரு, கனிமொழி, கலாநிதி மாறன், கதிர் ஆனந்த், கலாநிதி வீராசாமி, உதயநிதி, சபரீசன் எனப் பலரின் பெயர்கள் இடம்பெற்றிருக்கின்றன. ``தற்போது வெளியிட்டிருப்பது முதல் பாதி மட்டுமே. விரைவில் இரண்டாம் பாகம் வெளியாகும்” என்றும் அண்ணாமலை தெரிவித்திருக்கிறார்.,
ரஃபேல் வாட்ச்: ``அதற்கான பில் இதோ...”
கமலாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து வரும் அண்ணாமலை, தான் கட்டியிருக்கும் ரஃபேல் வாட்ச்சுக்கான பில்லை செய்தியாளர்களிடம் காட்டினார். ``ரஃபேல் வாட்சின் 147-வது வாட்சை நான் வாங்கியிருக்கிறேன். சேரலாதன் ராமகிருஷ்ணன் என்ற நண்பரிடம் இந்த ரஃபேல் வாட்சை வாங்கினேன். அதற்கான பில் இதோ” என்று செய்தியாளர்களிடம் பில்லைக் காண்பித்தார் அண்ணாமலை. ``எனது வங்கிக் கணக்கு முதல் சம்பளம் வரை அனைத்து விவரங்களையும் இன்று இணையதளத்தில் வெளியிடவிருக்கிறேன்” என்றார்.
``நான் கேள்வி கேட்கும் நேரம் இது. எனவே, ஒரு வாரம் கழித்து செய்தியாளர்களைச் சந்தித்து கேள்விகளுக்கு பதிலளிக்கிறேன். நான் பட்டியலை வெளியிட்ட பின்னர் நீங்கள் அதை முழுமையாக ஆராய்ச்சி செய்துவிட்டு பின்னர் கேளுங்கள். சாமானியன் அரசியலுக்கு வருவது மிக சிரமம். மாதம் எனக்கு 8 லட்சம் ரூபாய் செலவு செய்யும் நிலை இருக்கிறது. என் நண்பர்கள் எனக்கு உதவி செய்துவருகின்றனர்.
பல நல்ல நண்பர்கள் உதவியால் வாழ்க்கை போய்க்கொண்டிருக்கிறது. எனது கார்கூட வேறு ஒருவரின் பெயரில் இருக்கிறது. என் சம்பள விவரம், கிரெட்டிட் கார்ட் விவரம் என அனைத்தும் பட்டியலில் வரும்” என்றார்.
கமலாலயத்தில் அண்ணாமலை பேட்டி!
சென்னையிலுள்ள கமலாலயத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தற்போது செய்தியாளர்களைச் சந்தித்துவருகிறார். திமுக தொடர்பான ஊழல் மற்றும் சொத்துப் பட்டியலை வெளியிடுவதாகக் கூறியிருந்த நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தற்போது செய்தியாளர்களைச் சந்தித்துவருகிறார்.
திமுக தொடர்பான முக்கியக் கோப்புகளை வெளியிடுவதாகத் தெரிவித்த அண்ணாமலை, ``நான் இங்கு அவதூறுகளை அள்ளித் தெளிப்பதற்காக வரவில்லை. நான் சொல்வதற்குத் தகுந்த ஆதாரம் இருக்கிறது’’ என்று தெரிவித்திருக்கிறார்.
இன்று திமுக-வினரின் சொத்து, ஊழல் பட்டியலை வெளியிடும் அண்ணாமலை!
தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, `ஏப்ரல் 14-ம் தேதி தி.மு.க அமைச்சர்களின் சொத்து, ஊழல் பட்டியல் வெளியிடப்படும்’ என முன்னரே அறிவித்திருந்தார். இந்த நிலையில், `தி.மு.க-வினரின் ஊழல் பட்டியல் இன்று காலை 10:15 மணிக்கு வெளியிடப்படும்’ என பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை ட்விட்டர் பதிவில் தெரிவித்திருக்கிறார்.
DMK Files
April 14th, 2023 - 10:15 am pic.twitter.com/4Hlvq4l2G0— K.Annamalai (@annamalai_k) April 13, 2023
``தமிழக பாஜக மாநிலத் தலைமையகமான கமலாலயத்தில் காலை சரியாக 10:15 மணிக்கு தமிழக பாஜக மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை ( DMK FILES) திமுக-வின் சொத்து மற்றும் ஊழல் பட்டியலை வெளியிடுகிறார்” என பாஜக ஊடகப் பிரிவு தெரிவித்திருக்கிறது.
தமிழ்ப் புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு கன்னியாகுமரி, தோவாளை ஸ்ரீ கிருஷ்ணசுவாமி திருக்கோயிலில் நடைபெற்றுவரும் சித்திரை விஷு கனி காணுதல் நிகழ்ச்சி மற்றும் சுவாமி தரிசனம் செய்துவரும் பொதுமக்கள்!
http://dlvr.it/SmSrLR
Friday 14 April 2023
Home »
» Tamil News Live Today: ``ஓ.பன்னீர்செல்வம், என்னை சந்திக்க நேரம் கேட்டால், சந்திப்பேன்!” - சசிகலா