2021 சட்டமன்றத் தேர்தல் முடிவுக்குப் பிறகு டாக்டர் மகேந்திரனில் ஆரம்பித்து சி.கே.குமரவேல், முருகானந்தம், முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்தோஷ்பாபு, பழ.கருப்பையா எனக் கட்சியின் முன்னணி பிரமுகர்கள் பலர் கட்சியைவிட்டு வெளியேறிய நிலையில், தற்போது 2024 நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் கட்சியின் தொழிலாளர் நல அணி மாநிலச் செயலாளர் சு.ஆ.பொன்னுசாமி கட்சியை விட்டு விலகியிருப்பது ம.நீ.ம-வில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.மனோ தங்கராஜுடன் பொன்னுசாமி
இது குறித்து நம்மிடம் பேசிய அந்தக் கட்சிப் பிரமுகர்கள் சிலர், “தொழிலாளர் நல அணி மாநிலச் செயலாளர் சு.ஆ.பொன்னுசாமி தமிழ்நாடு பால் முகவர் நலச் சங்கத்தின் நிறுவனத் தலைவராகவும் பொறுப்பு வகித்துவருகிறார். இந்த நிலையில், தமிழ்நாடு அமைச்சர் மனோ தங்கராஜைப் பால் முகவர் நலச்சங்கத்தின் தலைவர் என்கிற முறையில் சந்தித்ததோடு அந்தச் செய்தியை கட்சியின் வாட்ஸ்அப்பிலும் பகிர்ந்திருக்கிறார். பின்னர் தவறுதலாகப் பதிவிட்டதாக அதை நீக்கவும் செய்திருக்கிறார். இதைக் காரணம் காட்டி கட்சித் தலைமை நிர்வாகிகள் முன் விசாரணைக்கு ஆஜராகக் கட்சி தரப்பிலிருந்து அழைப்பு விடுக்கப்பட்டது. உடையும் உலகநாயகனின் மக்கள் நீதி மய்யக் கனவு… அடுத்தடுத்து வெளியேறும் நிர்வாகிகள்… காரணம் என்ன?!
கடந்த மே மாதம் அழைப்பை ஏற்று ஆஜரான பொன்னுசாமியிடம் `அமைச்சரைச் சந்திக்கத் தலைமையிடம் அனுமதி பெற்றீர்களா?’ என்பது போன்ற கேள்விகளை முன்வைத்திருக்கின்றனர். அதோடு கட்சிப் பொறுப்புக்கு வருபவர்கள் சங்கப் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டுத்தான் வருவார்கள் என்றும் கட்சியின் பொறுப்புகளிலிருந்தால் பால் முகவர் சங்க பொறுப்புகளில் இருக்கக் கூடாதென்ற தொனியில் பேசியிருப்பது பொன்னுசாமியை காயப்படுத்திவிட்டது. ஒருசில மாதங்களாகவே கட்சிக்குள் ஓடிக்கொண்டிருந்த விவகாரம் இன்று வெடித்திருக்கிறது” என்கிறார்கள் விவரமறிந்த கட்சிப் பிரமுகர்கள்.பொதுச் செயலாளர் அருணாச்சலம்
இது குறித்து சு.ஆ.பொன்னுசாமி ஆதரவாளர்கள் சிலரிடம் பேசினோம் ``கட்சியில் இணைவதற்கு முன்பே தமிழ்நாடு பால்முகவர் நலச் சங்கத்துக்காக உழைத்து வருபவர் சு.ஆ.பொன்னுசாமி. இதை அறிந்தே ம.நீ.ம அவருக்குப் பதவி வழங்கியது. ஆரம்பத்திலிருந்தது போலான சுதந்திரம் கட்சிக்குள் இப்போதில்லை. கட்சியின் பதவியைச் சுட்டிக்காட்டி பொன்னுசாமியின் சமூகப் பணிகளைத் தடுக்க நினைக்கிறார்கள். ஒரு ட்வீட் போடுவதாக இருந்தாலும் கட்சித் தலைமையிடம் அனுமதி பெற்றுத்தான் போட வேண்டும் என்ற நிலையில் கட்சி இருக்கிறது. கட்சிப் பிரமுகர்களின் தனிப்பட்ட வாழ்வு, தொழில், சமூகப் பணிகளிலும் மூக்கை நுழைக்கும் போக்கு அதிகரிப்பதனால்தான் சு.ஆ.பொன்னுசாமி விலகியிருக்கிறார்” என்கிறார்கள்.
Junior vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்
https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/3OITqxsபத்தல... பத்தல... நிதியும் பத்தல..! - திண்டாடும் ‘மக்கள் நீதி மய்யம்’
http://dlvr.it/StZcxL
Sunday 13 August 2023
Home »
» ம.நீ.ம-வின் அடுத்த விக்கெட்... கட்சியை விட்டு விலகிய மாநில நிர்வாகி பொன்னுசாமி - பின்னணி என்ன?!