திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் வீடு, அவருக்குச் சொந்தமான மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை, ஹோட்டல் உட்பட அவருக்குத் தொடர்புடைய இடங்களில், வருமான வரித்துறை அதிகாரிகள் இரண்டு வாரங்களுக்கு முன்பு திடீர் சோதனை மேற்கொண்டனர். சரியாக அக்டோபர் 5-ம் தேதி முதல் இந்த சோதனை, தொடர்ந்து நடத்தப்பட்டு வந்தது. இதனை, ``பா.ஜ.கவின் பழிவாங்கும் அரசியலுக்கு அளவேயில்லை" என்று முதல்வர் ஸ்டாலின் சாடியிருந்தார்.ஜெகத்ரட்சகன்
இந்த நிலையில், சோதனை தொடர்பான அறிக்கையை வருவமான வரித்துறை வெளியிட்டிருக்கிறது. அந்த அறிக்கையில், ``05.10.2023 அன்று, தொழில்சார் படிப்புகளில் ஈடுபடும் கல்வி நிறுவனங்களை முதன்மையாக நடத்தும் இரு குழுமங்கள் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
இந்த குழுக்கள் மதுபான ஆலைகள், மருந்து தயாரிப்புகள், மருத்துவமனைகள் மற்றும் ஹோட்டல் போன்றவற்றை நடத்திவருகின்றன. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மொத்தமாக 100 இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது. இதில், மாணவர்களிடம் வசூலிக்கப்பட்ட கட்டணங்கள் தொடர்பாக, கணக்கில் காட்டப்படாத ரூ.400 கோடி மதிப்பிலான ரசீதுகள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. மேலும் தவறான தகவல்கள் அளித்து ரூ.25 கோடி ஸ்காலர்ஷிப் வழங்கப்பட்டதற்கான ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாமல், சம்பந்தப்பட்ட குழுவால் நடத்தப்படும் மதுபான ஆலையில், ரூ.500 கோடிக்கு போலி கணக்கு காட்டப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.வருவமான வரித்துறை அறிக்கை
கைப்பற்றப்பட்ட ஆவணங்களில், அறங்காவலர்கள் தனிப்பட்ட செலவுகளுக்காகவோ அல்லது பல்வேறு வணிகங்களில் ஈடுபடுத்துவதற்காகவோ, அறக்கட்டளையிலிருந்து ரூ.300 கோடிக்கும் அதிகமான தொகை மடைமாற்றப்பட்டிருக்கிறது. இதுவரை நடந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.32 கோடி ரொக்கமும், ரூ.28 கோடி மதிப்பிலான தங்கமும் கைப்பற்றப்பட்டிருக்கிறது. மொத்தமாக இதன் மதிப்பு ரூ.60 கோடி. மேலும், அடுத்தகட்ட விசாரணைகள் விசாரணைகள் நடைபெற்றுவருகிறது" என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/46c3KEk
">
https://bit.ly/46c3KEk
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/46c3KEk
">
https://bit.ly/46c3KEk
/>
ஐ.டி ரெய்டு @ ஜெகத்ரட்சகன் - திமுக-வுக்குத் தொடரும் நெருக்கடி... பின்னணி என்ன?!
http://dlvr.it/SxfBQs
Thursday, 19 October 2023
Home »
» ஜெகத்ரட்சகன்: ``ரூ.32 கோடி ரொக்கம், ரூ.28 கோடி தங்கம் பறிமுதல்!" - வருமான வரித்துறை தகவல்