தமிழக சுகாதாரத்துறையில் பணியாற்றியவர்களுக்கு, முன் தேதியிட்டு சுகாதார ஆய்வாளர்களாகப் பதவி உயர்வு வழங்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் 2011-ம் ஆண்டு தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டது.
இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனக் கூறி, அரசுக்கு எதிராக 2015-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் கிருஷ்ணகுமார், பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, ``உத்தரவை அமல்படுத்தியது குறித்து அறிக்கையும் தாக்கல் செய்யவில்லை. சுகாதாரத்துறைச் செயலாளரும், பொது சுகாதாரத்துறை இயக்குநரும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகவும் இல்லை. போதுமான அவகாசம் வழங்கியும் உத்தரவை அமல்படுத்தவில்லை" என மனுதாரர்கள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.சென்னை உயர் நீதிமன்றம்
தகுதியான 132 பேரில் 10 பேருக்கு பதவி உயர்வு வழங்கி உத்தரவு அமல்படுத்தப்பட்டிருப்பதாகவும், மீதமுள்ள 122 பேருக்கு உத்தரவை அமல்படுத்துவது தொடர்பாக எட்டு வாரங்கள் அவகாசம் வழங்க வேண்டும் எனவும், தமிழ்நாடு அரசுத் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்தக் கோரிக்கையை ஏற்று வழக்கின் விசாரணையை எட்டு வாரங்களுக்குத் தள்ளிவைத்த நீதிபதிகள், எட்டு வாரங்களில் இந்த உத்தரவை அமல்படுத்தாவிட்டால் சுகாதாரத்துறைச் செயலாளர் நேரில் ஆஜராக நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்திருக்கின்றனர். சுகாதாரத்துறை செயலாளர்-ககன்தீப் சிங்
மேலும், மனுதாரர்களின் மன உளைச்சல், பாதிப்புகளைக் கருத்தில்கொண்டு 122 மனுதாரர்களுக்கும், தலா 1,000 ரூபாய் வீதம் 1.22 லட்சம் ரூபாயை வழக்குச் செலவாக இரண்டு வாரங்களில் வழங்க வேண்டும் எனவும் சுகாதாரத்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டிருக்கின்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/46c3KEk
">
https://bit.ly/46c3KEk
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/46c3KEk
">
https://bit.ly/46c3KEk
/>
`உரிய இழப்பீடு பெற்றுத் தரப்படும்!' - விவசாயிகளிடம் உறுதியளித்த ககன்தீப் சிங் பேடி
http://dlvr.it/Sxymfz
Thursday 26 October 2023
Home »
» `1.22 லட்சம் ரூபாயை வழக்குச் செலவாகக் கொடுங்கள்!' - ககன்தீப் சிங்குக்கு நீதிமன்றம் எச்சரிக்கை