50 ஆயிரம் வீரர்களுடன் சீன எல்லையில் பாதுகாப்பு
( 50000 thousand Indian Army force in India - china border. India, China, border, Army )
புதுடில்லி: சீன படைகள் இந்திய எல்லைக்குள்ஊடுருவுவதை தவிர்க்கும் வகையில் மத்திய அரசு எல்லைப்பகுதியில் படைககளை குவிக்க முடிவு செய்துள்ளது.
65ஆயிரம் கோடி செலவு:
பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் பாதுகாப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே. அந்தோணி, வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், நிதியமைச்சர் சிதம்பரம் உட்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் எல்லையில் நிலவி வரும் பிரச்னைகள் மற்றும் அவற்றுக்கு தீர்வு காண்பது குறித்து விவாதிக்கப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் சீனாவை ஒட்டிய எல்லைப்பகுதி முழுவதிலும் ராணுவ வீரர்களை அதிகளவில் பாதுகாப்பு பணியில் ஈடுபடச்செய்வது எனவும், இதற்காக சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்களை பணியில் அமர்த்தவும், இத்திட்டத்தை ரூ.. 65ஆயரம் கோடி செலவில் செயல்படுத்துவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.
புதிய தலைமையகம்:
திட்டத்தின் ஒரு பகுதியாக மேற்கு வங்க மாநிலத்தில் உளள பனாகர் படை பகுதியி்ல் ஒரு புதிய தலைமையகம் ஏற்படுத்துவது தொடர்ந்து அப்பகுதியில் விமானப்படையினர் கண்காணிப்பில் ஈடுபட செய்வது என்றும், பீகார், அசாம் மாநிலங்களில் இரண்டு மண்டல அளவிலான அலுவலகங்கள் அமைப்பது. இதன்மூலம் சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களை கையாளும் வகையில் பாதுகாப்பு பணியை மேற்கொள்வது என்பன போன்ற முடிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ராணுவ அதிகாரிகள் வருகை:
பாதுகாப்பு தொடர்பான் ஆலோசனை கூட்டம் பிரதமர் அலுவலகத்தில் நடந்து கொண்டிருக்கும் நேரத்தில் ராணுவத்தளபதி பிக்ராம் சிங், விமானப்படை தளபதி பிரவுனே ஆகியோர் வந்திருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பாதுகாப்புத்துறை அலுவலக்ம அதிகாரிகள் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ள அமைச்சர்கள் துறை ரீதியாக ஏதேனும் சந்தேகத்தை எழுப்பினால் அவற்றிற்கு உடனடியாக பதில் அளிக்கவும் , மேலும் தேவைப்படின் ஆலோசனைகளை வழங்கவும் வந்திருந்ததாக தெரிவித்தனர்.