மருத்துவப் படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வு ரத்து -உச்சநீதிமன்றம்
அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர மருத்துவ கவுன்சில் அறிவித்த தேசிய அளவிலான பொது நுழைவு தேர்வை உச்சநீதிமன்றம் நேற்று ரத்து செய்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., மற்றும் முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு பொது நுழைவு தேர்வு நடத்த, இந்திய மருத்துவ கவுன்சில் முடிவு செய்து கடந்த ஆண்டு அறிவிப்பு வெளியிட்டது. சிபிஎஸ்இ பாடத்திட்டம் அடிப்படையில் இந்த தகுதி தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டதால், இதற்கு மாநில அரசுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
பொது நுழைவு தேர்வு காரணமாக மாநில அரசு பின்பற்றும் இடஒதுக்கீட்டு கொள்கை பாதிக்கப்படும் என தமிழகம், கர்நாடகா போன்ற மாநிலங்கள் இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தன. பொது நுழைவுத் தேர்வை எதிர்த்து உச்ச நீதிமன்றம் உட்பட பல்வேறு நீதிமன்றங்களில் 115 வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த வழக்குகளில் கடந்த ஆண்டு டிசம்பர் 13 ஆம் தேதி உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், "மாநிலங்கள், பல்கலைக் கழகங்கள், இந்திய மருத்துவ கவுன்சில், இந்திய பல் மருத்துவ கவுன்சில் மற்றும் இதர கல்வி நிறுவனங்கள் நுழைவு தேர்வுகளை தனித்தனியாக நடத்தி கொள்ளலாம். ஆனால், மறுஉத்தரவு பிறப்பிக்கும் வரை தேர்வு முடிவுகளை வெளியிடக் கூடாது" என கூறியது. பொது நுழைவுத் தேர்வு விவகாரம் தொடர்பாக பல்வேறு நீதிமன்றங்களில் தொடரப்பட்ட வழக்குகளை கடந்த ஜனவரி 15 ஆம் தேதிக்குள் உச்ச நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்தது.

அதன்பின், கடந்த மே 13 ஆம் தேதி உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், நுழைவுத் தேர்வு முடிவுகளின் அறிவிப்பை வெளியிடுவதற்கான தடையை நீக்கி, மாணவர் சேர்க்கையை நடத்த அனுமதி அளித்தது. தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் நுழைவு தேர்வு இல்லாமல் பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கை நடந்தது.
இந்நிலையில் இந்த வழக்கில் தலைமை நீதிபதி அல்டாமஸ் கபீர், நீதிபதி விக்ரமஜித் சென், நீதிபதி டேவ் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் நேற்று தீர்ப்பளித்தது. தலைமை நீதிபதி அல்டாமஸ் கபீர், நீதிபதி விக்ரமஜித் சென் ஆகியோர் இணைந்து அளித்த தீர்ப்பில், "பொது நுழைவுத் தேர்வு நடத்த இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு அதிகாரம் இல்லை. பொது நுழைவுத் தேர்வு அறிவிப்பு, அரசியல் அமைப்பு சட்டத்தின் 19, 25, 26, 29 மற்றும் 30 பிரிவுகளுக்கு எதிரானது" என கூறினர்.
இந்த கருத்தில் நீதிபதி தவேக்கு உடன்பாடு இல்லை. அவர் வேறுபட்ட கருத்தை தெரிவித்தார். "தேசிய அளவில் தகுதி நுழைவுத் தேர்வு (என்.இ.இ.டி) நடத்துவது சட்ட ரீதியானது. அது நடைமுறைப்படுத்த கூடியதுதான். சமூகத்துக்கும் இது அவசியமானது" என கூறினார்.
2:1 என்ற விகிதத்தில் தீர்ப்பு அளிக்கப்பட்டதால், பெரும்பான்மை தீர்ப்பே இறுதியானது. அதனால், மருத்துவ படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வு அறிவிப்பை ரத்து செய்வதாக உச்ச நீதிமன்றம் அறிவித்தது. இந்த தீர்ப்பு ஏற்கனவே நடந்து முடிந்த மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை பாதிக்காது எனவும் உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.