புதிய நோட்டு:
இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ரிசர்வ் வங்கி புதிய ரூ.1 கரன்சி நோட்டுகளை புழக்கத்தில் விட உள்ளது. புதிய நோட்டில் H சின்னத்துடன் உட்பொதிந்த L எழுத்துடன், நோட்டின் முன்புறம் ரோஜா நிறத்துடன் இணைந்த பச்சையிலும் பின்புறம் மற்ற நிற கலவையிலும் இருக்கும்.
கையெழுத்து:
இது 9.7x 6.3 செ.மீ., அளவிலான இந்த நோட்டின் முன்புறத்தில் பாரத் சர்க்கார் என்ற வார்த்தைகள் இருக்கும். இதில் நிதித்துறை செயலர் ரத்தன் பி வட்டலின் இரு மொழி கையெழுத்தும் இடம்பெற்றிருக்கும்.
சர்வதேச எண்ணில் ஆண்டு:
எண்களானது நோட்டின் வலது கீழ்ப்புறம் கருப்பு வண்ணத்தில் அச்சடிக்கப்பட்டிருக்கும். இவற்றோடு ரூபாயின் மதிப்பானது 15 இந்திய மொழிகளில், மொழிகளுக்கான முகப்பிலும், நோட்டின் மையப்பகுதியின் கீழ்ப்புறம் சர்வதேச எண்ணில் ஆண்டும் அச்சிடப்பட்டிருக்கும்.
நாணயங்களும் செல்லத்தக்கது:
புதிய நோட்டு புழக்கத்திற்கு வந்த பின்னும், ஏற்கெனவே புழக்கத்தில் உள்ள நாணயங்களும் தொடர்ந்து சட்டப்படி செல்லுபடியாகும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.