புதுடில்லி:நாடு முழுவதும், இரண்டு லட்சம் ஏ.டி.எம்., இயந்திரங்களில், புதிய, 500 - 2,000 ரூபாய் நோட்டுகளை வைக்கும் வகையில் மாற்றம் செய்யப்பட்டு வருவதாகவும், 10 - 15 நாட்களுக்குள், பணத் தட்டுப்பாடு கட்டுக்குள் வரும் எனவும், ஏ.டி.எம்., இயந்திரங்களை சீரமைக்கும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கறுப்புப் பணம் மற்றும் கள்ள நோட்டு புழக் கத்தை ஒடுக்க, மத்திய அரசு அதிரடி நடவடிக் கையில், ஈடுபட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, 500 - 1,000 ரூபாய் நோட்டு களை செல்லாதவை யாக,8ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.
'மக்கள், தங்களிடம் உள்ள, பழைய, 500 - 1,000 ரூபாய் நோட்டுகளை, வங்கிகள், தபால் நிலை யங்களில் கொடுத்து, புதிய நோட்டுகளை பெற லாம்' என, மத்திய அரசு அறிவித்தது. டிச., 30 வரை, அங்கீகரிக்கப்பட்ட, ஏதேனும் ஒரு அடையாள அட்டையை காண்பித்து, 4,000 ரூபாய் வரை, நோட்டு களை மாற்றலாம் எனவும் அறிவிக்கப்பட்டது.
சில்லரை தட்டுப்பாடு:
இதையடுத்து, புதிதாக அச்சடிக்கப்பட்டுள்ள, 500 - 2,000 ரூபாய் நோட்டுகள் வங்கிகள் மூலம் வினியோகிக்கப்பட்டு வருகின்றன. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில், 2,000 ரூபாய் நோட்டுகள் மட்டுமே கிடைக்கின்றன. புதிய, 500 ரூபாய் நோட்டுகள் பல இடங்களில் கிடைக்கா ததால், சில்லரை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
பழைய நோட்டுகளை மாற்ற, வங்கிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியதால், வங்கி ஊழியர்கள் திணறும் நிலை ஏற்பட்டது. இதை யடுத்து, அடுத்த இரு நாட்களில், ஏ.டி.எம்.,கள் இயங்க துவங்கிய தால், பணம் எடுப்பதற்காக, அங்கும் மக்கள் கூட்டம் அலைமோதியது.
தவிர, ஒரே நபர் மீண்டும் மீண்டும் வங்கிகளில், பழைய ரூபாய் நோட்டுகளைகொடுத்து புதிய நோட்டுகளை வாங்கிச் சென்றதால், பணத் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதன் பின், வங்கிக ளில் பணம் மாற்றும் உச்ச வரம்பு, ஒரு நாளைக்கு, 4,000 ரூபாயிலிருந்து, 4,500 ஆக உயர்த்தப்பட்டு, பின், 2,000 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.
ஏ.டி.எம்.,களில், பணம் எடுக்கும் உச்ச வரம்பு, ஒரு நாளைக்கு, 2,000 ரூபாயில் இருந்து, 2,500 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஒரே நபர் மீண்டும் மீண்டும் வங்கிகளில் பணம் பெறுவதை தடுக்க, வங்கிகளில் பணம் மாற்ற வரும் நபர்களின் விரல்களில் அழியாத மை வைக்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டது.
இத்திட்டம் நடைமுறைக்கு வந்ததும், வங்கிகளில் பணம் மாற்ற வருவோரின் கூட்டம், 40 சதவீதம் வரை குறைந்தது. அதே சமயம், ஏ.டி.எம்., மையங் களில் நாளுக்கு நாள், கூட்டம் அதிகரித்து வரு கிறது. இதை சமாளிக்க, மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
2லட்சம் ஏ.டி.எம்.,கள்:
இது குறித்து, ஏ.டி.எம்., மையங்களை சீரமைக்கும் நிறுவனத்தைச் சேர்ந்த உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:பழைய, 500 -1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டு உள்ள தால், இரண்டு லட்சம் ஏ.டி.எம்.,களில் மாற்றம் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. புதிதாக, அச்சடிக் கப்பட்டு உள்ள, 500 - 2,000 ரூபாய் நோட்டுகள், அளவில் சிறியதாய் இருப்பதால்,அதற்கு
தகுந்தவாறு இயந்திரத்தில் மாற்றம் செய் யப்பட்டு வருகிறது. தற்போதைய நிலவரப்படி, ஒரு நாளைக்கு, 20 ஆயிரம், ஏ.டி.எம்., இயந்தி ரங்களில் இந்த மாற்றம் செய்யப்பட்டு வருகிறது.
அதன் அடிப்படையில், நாடு முழுவதும் உள்ள, இரண்டு லட்சத்திற்கும் மேலான, ஏ.டி.எம்.,கள் அனைத்திலும், இந்த மாற்றத்தை அமல்படுத்த, இன்னும், 10 - 15 நாட்கள் ஆகும். அதன் பின்,
சில்லரை மற்றும் பணத் தட்டுப்பாடு குறையும். இவ்வாறு அவர் கூறினார்.
நோட்டுகளை மாற்ற கெடு!
பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றும் திட்டத் தில், புதிய நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. இது குறித்து, ரிசர்வ் வங்கி வெளியிட்டு உள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:பழைய, 500 - 1,000 ரூபாய் நோட்டுகளை, வங்கிகளில் கொடுத்து, செல்லத்தக்க நோட்டுகளை பெறும் திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, டிச., 30க்குள், ஒரு நபர், ஒரே ஒரு முறை மட்டுமே, பழைய ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ள முடி யும். அதுவும், ஒரு நபர், அதிகபட்சமாக, 2,000 ரூபாய் வரை மட்டுமே மாற்றலாம். எனினும், வங்கிக் கணக்கில், 'டிபாசிட்' செய்ய எந்த ஒரு உச்சவரம்பும் கிடையாது. இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary:
Across the country, two million ATMs., Machinery, new, 500 - 2,000 banknotes, which was being modified, 10 - 15 days, will come down to a shortage of money, atm., Said the company will adjust the machines.