இந்தியாவின் வட பகுதியில் காசியாபாத் நகரிலுள்ள சிறியதொரு ஆடை தொழிற்சாலையில், இன்று அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்தில், குறைந்தது 13 பேர் பலியாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மின் கோளாறால் ஏற்பட்டிருக்கலாம் என்று நம்பப்படும் இந்த தீ விபத்தில், நெரிசல் மிகுந்த இந்த தொழிற்சாலை கட்டடத்தின் முதல் தளத்தில் தூங்கி கொண்டிருந்த 10 பேர் சிக்கி, மூச்சுத் திணறி உயிரிழந்துள்ளனர்.
காசியாபாத் நகர மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் சால்மான் டாஜ்
தரை தளத்தில் தூங்கி கொண்டிருந்த மூன்று பேரை, அருகிலுள்ள மருத்துவமனைக்கு உள்ளூர் நிர்வாகத்தினர் விரைவாக கொண்டு சென்ற பின்னர், இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளதாக காசியாபாத் நகர மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் சால்மான் டாஜ் தெரிவித்திருக்கிறார்.
பல சிறிய தொகுதி தொழிற்சாலைகள் அமைந்திருக்கும் நெரிசல் மிகுந்த இந்த தொழில்துறை பகுதியில் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணத்தை காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
முதல் தளத்தில் தூங்கி கொண்டிருந்த 10 பேரும், தரை தளத்தில் தூங்கிய 3 பேரும் பலியாகியுள்ளனர் |
மின் கோளாறால் ஏற்பட்டிருக்கலாம் என்று நம்பப்படும் இந்த தீ விபத்தில், நெரிசல் மிகுந்த இந்த தொழிற்சாலை கட்டடத்தின் முதல் தளத்தில் தூங்கி கொண்டிருந்த 10 பேர் சிக்கி, மூச்சுத் திணறி உயிரிழந்துள்ளனர்.
காசியாபாத் நகர மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் சால்மான் டாஜ்
தரை தளத்தில் தூங்கி கொண்டிருந்த மூன்று பேரை, அருகிலுள்ள மருத்துவமனைக்கு உள்ளூர் நிர்வாகத்தினர் விரைவாக கொண்டு சென்ற பின்னர், இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளதாக காசியாபாத் நகர மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் சால்மான் டாஜ் தெரிவித்திருக்கிறார்.
மின் கோளாறால் இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது |