மும்பை: வங்கிகளுக்கு, 9,000 கோடி ரூபாய் கடன் பாக்கி வைத்து வெளிநாடுக்கு தப்பியுள்ள பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையாவின், 1,620 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்தை முடக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. பல்வேறு வங்கிகளில் கடன் வாங்கி, 9,000 கோடி ரூபாய் பாக்கி வைத்துள்ள பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா, வெளிநாடு தப்பி சென்றுள்ளான்.
மல்லையா மீதான பண மோசடி வழக்குகளை விசாரித்து வரும், அமலாக்கத் துறை, அவனுக்கு சொந்தமான, 8,041 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை முடக்கியுள்ளது.
இந்த நிலையில், மல்லையாவுக்கு சொந்தமான மேலும் சில சொத்துக்களை முடக்க அனுமதி கோரி, பண மோசடி தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில், அமலாக்கத் துறை விண்ணப்பித்திருந்தது. அமலாக்கத் துறையின் கோரிக்கையை ஏற்று, விஜய் மல்லையாவை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ள, மும்பையில் உள்ள சிறப்பு கோர்ட், அவனுக்கு சொந்தமான, 1,620 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை முடக்கவும் அனுமதி அளித்துள்ளது. அதன்படி, மல்லையாவுக்கு சொந்தமான, பயன்படுத்த தடை விதிக்கப்பட்ட மற்றும் அடமானம் வைக்கப்பட்டுள்ள பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டுள்ள பங்குகளை, அமலாக்கத் துறை முடக்க உள்ளது.