ரூபாய் நோட்டுகள் குறித்த மத்திய அரசின் திடீர் அறிவிப்பால், தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகள், சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அவர்களின் நலன் கருதி, குறைந்தபட்சம், 30ம் தேதி வரையிலாவது, தனியார் மருத்துவமனைகள், மருந்தகங்களில், பழைய, 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லும் என, மத்திய அரசு அறிவிக்க வேண்டும்.
அகிலேஷ் யாதவ், உ.பி., முதல்வர், சமாஜ்வாதி கட்சி
மாநிலங்களுக்கு பாதிப்பு!
மத்திய அரசின் சில நடவடிக்கைகள், மாநில அரசின் வரி வருவாயில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. மாநில அரசுகளுக்கு சேர வேண்டிய வரி வருவாயை குறைத்து வழங்கும் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என, அறிவிக்கப்பட்டுள்ளதால், தெலுங்கானாவில், ரியல் எஸ்டேட் துறை பெரிய அளவில் சரிவை சந்திக்கும்.
சந்திரசேகர ராவ், தெலுங்கானா முதல்வர், டி.ஆர்.எஸ்., கட்சி
ஏன் இந்த கலக்கம்?
பழைய, 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பால், ஹவாலா கொள்ளையர்கள், போதைப் பொருள் கடத்தல்காரர்கள், பயங்கரவாதிகள் உள்ளிட்டோர் கலக்கம் அடைந்துள்ளனர். ஆனால், முலாயம் சிங், மாயாவதி, கெஜ்ரிவால் போன்ற அரசியல் தலைவர்கள் கலங்குவது ஏன்? இதன் மூலம், அவர்களின் உண்மை முகம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.