டேராடூன்: உத்தரகண்ட் மாநிலத்தில் ஜீப் ஒன்று பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 2 பெண்கள், சிறுமி உள்பட 7 பேர் பலியாகினர்.
உத்தரகண்ட் மாநிலம் தெஹ்ரி கர்வால் மாவட்டத்தில் உள்ள லாசி கிராமத்தை சேர்ந்த 11 பேர் ஜீப் ஒன்றில் பவ்ரி கர்வால் மாவட்டத்தில் உள்ள பைஜ்ரோ கிராமத்திற்கு சென்றனர்.
பைஜ்ரோவில் இருந்து ஜீப் மூலம் வீடு திரும்பினர். மலைப்பகுதியில் வந்த ஜீப் தலிசைன் பிளாக்கில் மதியம் 1 மணிக்கு வந்து கொண்டிருந்தபோது 50 அடி ஆழ பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 பெண்கள், சிறுமி உள்பட 7 பேர் பலியாகினர், 4 பேர் காயம் அடைந்தனர்.
காயம் அடைந்தவர்கள் பைஜ்ரோ மற்றும் காஷிபூரில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Friday, 4 November 2016
Home »
» உத்தரகண்டில் ஜீப் பள்ளத்தில் விழுந்து விபத்து: 2 பெண்கள் உள்பட 7 பேர் பலி